மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ.   பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போராட்டம்தான் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கம். 1927-ல் மஹத்தில் நடந்த இரண்டு மாநாடுகள் அதன் தொடக்கப்புள்ளி. ஆவணக் காப்பகத் தரவுகளைக் கொண்டு இதுவரை வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளரும் மனிதஉரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே. முதல் மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆர்.பி.மொரெ எழுதிய மராத்திய நூலின் மொழிபெயர்ப்பையும் இந்நூலில் சேர்த்திருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை, டி.வெங்கட்ராவ் பாலு, சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. உணவுப் பழக்கத்திலிருந்து உறங்கும் முறைவரை கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண் டிய நியமங்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், குழந்தை பிறப்பின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம். குழந்தை வளர்ப்பின் பல்வேறு நிலைகள், தாய்-சேய் நலத்துக்கான மருத்துவக் குறிப்புகள், குழந்தையின் மனநலத்தைப் பேணுவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல் இது. குழந்தை வளர்ப்பில் தந்தையர்களுக்கான பங்கை உணர்த்தி அதை நிறைவேற்றுவதற்கான […]

Read more

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு சிறுவர்களின் உலகத்தில் நுழைந்தாக வேண்டும். அந்த வித்தை அறிந்து குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதப்பட்ட சின்னச் சின்ன கதைகள். கதையோடு ஒழுக்கமும் நுணுக்கமாய் போதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 6 7 8