பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி (கால வரிசையில்ஆவணப் பதிவுகள்) – பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன், மொழிபெயர்ப்பு: கி.அ.சச்சிதானந்தம், இரா.சுப்பராயலு , வெளியீடு: சீனி.விசுவநாதன்,  பக்.416, விலைரூ.350 . மகாகவி பாரதி ஒரு பத்திரிகையாளராகவும், தேசவிடுதலை என்ற இலட்சியத்துடன் ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவும் இயங்கி வந்திருக்கிறார். அவர் விடுதலை வேட்கையுடன் நடத்திய கூட்டங்கள், ஆற்றிய சொற்பொழிவுகள், இந்தியா பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் ஆங்கிலேய ஆட்சியாளரைக் கோபமடையச் செய்தன. அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்ற நினைக்க வைத்தன. எனினும் பாரதி நிலைகுலைந்துவிடவில்லை. நண்பர்கள், […]

Read more