கறையான்

கறையான், சீர்ஷேந்து முகோபாத்யாய, தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், விலை : ரூ.170. மனிதன் தன்னிடம் திரும்பும் கதை வேலை, அலுவலகம், உறவு, அந்தஸ்து என்ற சராசரி சமூக வரையறையில் பொருந்திப்போகும் அனைத்துத் தகுதிகளையும் குணங்களையும் கொண்டவன்தான் ‘கறையான்’ நாவலின் நாயகன் சியாம். மேலதிகாரி தன்னைக் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டார் என்பதை முன்னிட்டு சௌகரியங்களைத் தந்த வேலையிலிருந்து வெளியேறுகிறான். அன்றிலிருந்து அவனுக்கு அதுவரை தெரிந்த, அறிந்த உலகம் மூடிவிடுகிறது; அவன் வசிக்கும் கொல்கத்தாவுக்குள்ளேயே மாயமும் ஏகாந்தமும் கொண்ட இன்னொரு உலகம் திறக்கிறது. அங்கே […]

Read more

அறிவு தேடலில் அறிவியல் உணர்வு

அறிவு தேடலில் அறிவியல் உணர்வு, ராஜேந்திர பிஹாரி லால், தமிழாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், விலை 90ரூ. உணர்ந்துப் படிக்கலாம் அறிவியலை இன்று உலகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய பங்காற்றி இருப்பது அறிவியல்தான் என்றாலும் மூடநம்பிக்கைகளுக்குப் பின்னே ஏனோ மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அதற்குக் காரணம் இயற்கையின் புதிரான ரகசியங்களை விளக்கும் அறிவியலை அனைவருக்கும் கொண்டுசேர்க்கத் தவறியதே. அப்படி தவறவிட்டதைப் பிடிக்கும் முயற்சியே அறிவு தேடலில் அறிவியல் உணர்வு. நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சிறுவன் தாகூர்

சிறுவன் தாகூர், லீலா மஜும்தார், தமிழில்-ரா.கி. ரங்கராஜன், நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை. பள்ளிக்கூடம் பிடிக்காத நோபல் கவி பல குழந்தைகளைப் போல ரவீந்திரநாத் தாகூரும் பள்ளி செல்லும் வயதை அடைவதற்கு முன்பே, பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருந்த குழந்தைகளில் ஒருவர்தான். அவரது உறவுக்காரப் பையன்கள் சத்யாவையும், சோமனையும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தினமும் வண்டி வரும். அதில் தானும் போக வேண்டுமென்று குழந்தையாக இருந்த தாகூர் அழுது அடம்பிடித்திருக்கிறார். அப்போது தாகூருக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரோ கொஞ்ச காலத்தில் பள்ளிக்குப் போகமாட்டேன் […]

Read more

மனித உரிமைகள் வினாக்களும் விடைகளும்

தமிழிசை வரலாறு, நா. மம்மது, நாதன் பதிப்பகம், 72-43, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 600009. மறுக்கப்பட்ட தமிழிசைக்கும் மறக்கப்பட்ட தமிழிசைக் கருவிகளுக்கும் ஒரு கையடக்க என்சைக்ளோபீடியாவாக உருவாகியிருக்கிறது இந்த நூல். தமிழ் இசைப் பண்கள், தமிழ் இசைக்கருவிகள், தமிழிசை வளர்த்த பெரியோர் என மூன்று பகுதிகளாக இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் நா. மம்மது. கர்நாடக ராகம் என்ற பெயரில் கேட்டுப் பழகிய ஹரிகாம்போதி, சங்கராபரணம், கரகரப்பிரியா போன்றவை செம்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை என்ற ஆதிகால தமிழ்ப் பண்களே என்பதைப் படிக்கும் ஒவ்வொரு […]

Read more