இலங்கையில் சிங்களவர்
இலங்கையில் சிங்களவர், இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும், பக்தவத்சல பாரதி, அடையாளம் பதிப்பகம், விலை 160ரூ.
சிங்களவர்களின் பூர்வீகம்
சிங்களவர்களின் பூர்வீகம் குறித்த ஆய்வுகளில் பல அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை சென்றவர்கள் என்பதைச் சொல்கின்றன. ஆதி வரலாற்று நூல்களைப் பொறுத்தவரை, வங்காளத்தின் வங்கா நாட்டின் இளவரசிக்கும் லாலா தேசத்துச் சிங்கத்துக்கும் பிறந்த சிகபாகுவின் மகனான விஜயனில் தொடங்குகிறது இலங்கையில் சிங்களவர்களின் பூர்வீகம். இந்நூல், சமூக அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மையமாகக் கொண்டு, அறிவியல்பூர்வமாக சிங்களவர்களின் பூர்வீகத்தை ஆராய்கிறது.
மானுடவியல், மரபணுவியல்ரீதியான ஆய்வுகளும் இந்நூலில் சுட்டிக்காட்டப்படுகின்றன. சிங்களவர்களின் வாழ்க்கை முறையில் காணப்படும் இந்தியத் தன்மை – குறிப்பாக, தென்னிந்தியத் தன்மை குறித்தும் இந்நூல் பேசுகிறது. இலங்கையின் அடையாள அரசியல் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.
– ஐசக்
நன்றி: தமிழ் இந்து,23/2/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000025917.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818