மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.
மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ.
இது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகம் அல்ல என்று முதலிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது என்றாலும் இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆர். பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட தகவல் பெட்டகமாக அமைந்து இருக்கிறது.
1949-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி, எம்.ஜி.ஆரின் வம்சாவளி என்ன என்பது பற்றிய வரலாற்று தொடர்பான ஆய்வு, எம்.ஜி,ஆரை ஜெயலலிதா கண்ட பேட்டியின் முழுவிவரம், எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், எம்.ஜி.ஆரின் ஆன்மிக கருத்து என்று பலதரப்பட்ட விஷயங்கள் இதில் அடங்கி இருப்பதால், எம்.ஜி.ஆர் அபிமானிகள் மட்டும் இன்றி அனைவரும் படிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 27/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818