365 டேக்ஸ்

365 டேக்ஸ், ஓவியர் ஆண்டி வரோல், ஆண்டி வரோல் கண்காட்சியகம் வெளியீடு. 15 நிமிடங்கள் அனைவரும் பிரபலம் மேற்கத்திய கலாசாரத்தில் பிரபலமான ஓவியர் ஆண்டி வரோல். அவர் எழுதிய 365 டேக்ஸ் என்ற ஓவிய நாவலை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்தில் இந்த நாவலை, ஆண்டி வாரோல் கண்காட்சியகம் வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில், 1960களில் பாப் கலாசாரம் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில், அந்த ஆதிக்கத்தை உடைத்து, சாமானிய மக்களுக்கும் ஓவியத்தை கொண்டு சேர்த்தவர் ஆண்டி வாரோல். ஓவியங்கள், மேல்தட்டு மக்களுக்கு உரியவை. சாதாரண மக்கள் ஓவியத்துக்கு […]

Read more

பொலிவியன் டைரி

எர்னஸ்டோ சே குவோ, பொலிவியன் டைரி, தமிழில் என். ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 220ரூ. புரட்சியாளனின் இறுதி நாட்கள் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023534.html ஆங்கிலத்தில் வெளிவந்த பொலிவியன் டைரி என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சி இயக்க வீரரான சே குவேராவின் கடைசிக் கட்ட போராட்டமான பொலிவிய விடுதலைப் போராட்டத்தை (1966 ஆம் நவம்பர் முதல் 1967 அக்டோபர் வரை) அவர் தன் கைப்பட எழுதிய நாட்குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். அர்ஜென்டினாவின் […]

Read more

எங்கதெ

எங்கதெ, இமையம், க்ரியா, சென்னை, விலை 110ரூ. சாவுற வெளையாட்டு ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை உரத்துப் பேசும் பல கதைகள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிறந்த கதைகளின் வரிசையில் முன்னணியில் வைக்க வேண்டியவற்றில் ஒன்று இமையம் எழுதியிருக்கும் எங் கதெ. இந்த நெடுங்கதையில் திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண் மீது ஒருவன் கொண்ட காதல், அந்த ஆணின் பார்வையில் அவனது மொழியில் விவரிக்கப்படுகிறது. இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல, அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வெளையாட்டுல […]

Read more

என் உடல் என் மூலதனம்

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. மருந்தென வேண்டாவாம் தன்னுடலைக் குறித்த புரிதலும் வணிக மருத்துவத்தை நிராகரித்தலும் இயற்கையைச் சார்ந்திருத்தலும் மிகப்பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்கிறார் நூலாசிரியர் போப்பு முன்னுரையில். இயற்கை மருத்துவம், மாற்று மருத்துவ ஆர்வலர் இவர். உடலோடு பேசுங்கள் என்பதுதான் இந்த நூலின் ஆதார சுருதி. உடலில் தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு பத்துநிமிடம் கூடுதலாகக் குளியுங்கள் என்பதில் ஆரம்பித்து நடை மேற்கொள்வதை விட ஓர் ஆராக்கியமான நண்பன் கிடையாது என்று சொல்லி விளங்க […]

Read more

கவிதையும் கத்தரிக்காயும்

கவிதையும் கத்தரிக்காயும், விக்ரமாதித்யன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 90ரூ. கவியின் பெருமூச்சு கவிதையும் கத்தரிக்காயும் என்ற கவிஞர் விக்கிரமாதித்தனின் கவிதைத் தொகுப்பில் 1990-ல் இருந்து 2010 வரை பல்வேறு இலக்கிய சிற்றிதழ்கள், பேரிதழ்களில் வெளிவந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எளிமையான நீரோடை போன்ற கவிதைகள். நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக மாறிமாறி பிரதிபலித்துச் செல்கறி காலக்கண்ணாடி. சமகாலத்தின் முகங்களை விமர்சிக்கவும் வியக்கவும் செய்கிற மொழியின் ஜாலம். தென்னை வளர்த்தால் துட்டுமேல் துட்டு தமிழ்க்கவிதை வளர்த்தால் ததிங்கிணத்தோம் தாளம்தான் – என்று 1990-ல் எழுதும் கவிஞர், கத்தரிக்காய்க்குத் தரும் […]

Read more

கம்ப வனத்தில் ஓர் உலா

கம்ப வனத்தில் ஓர் உலா, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை175ரூ. கம்ப ராமாயணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற வியப்பு, இந்த நூலைப் படிக்கும் போது உண்டாகிறது. கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு வித்தியாசமான விஷயங்களைப் புதிய கோணத்தில் பார்த்து, அதனை ருசிகரமாகத் தந்துள்ளனர். பட்டிமன்றப் பேச்சாளர்கள், தமிழ் அறிஞர்கள் என ஒன்பது பேர் ஆக்கித் தந்து இருக்கும் இந்தக் கட்டுரைகள் நவமணிகள் போல ஜொலிக்கின்றன. கம்பனில் தாய்மை, கம்பனில் நிறுவன மேலாண்மை, கம்பனில் தேவாரம் போன்ற கட்டுரைகள் கம்ப ராமாயணத்தை […]

Read more

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 130ரூ. மதங்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு பகவத்கீதை, பைபிள், குரான் போன்ற வேதப் புத்தகங்களிலிருந்து ஒற்றுமையுள்ள வாக்கியங்களை தேர்ந்தெடுத்து விளக்கம் அளிக்கிறது இந்நூல். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு ஆகியவற்றின் ரகசியத்தை உலகில் இதுவரை எந்த நூலாசிரியரும் கண்டுபிடித்து எழுதவில்லை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த ரகசியத்தை முதன் முறையாக இந்நூலில் வெளிப்படுத்துகிறேன் என்கிறார் நூலாசிரியர் எம்.ஜி.ஆரோக்கியராஜன். இறைவன் பெயரில் பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அந்த மதப்பிரிவுகளில் மனிதர்கள் மனக்கசப்புடன் […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன் பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, விலை 300ரூ. விரியும் அக உலகம்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023779.html ஹரன் பிரசன்னா எழுதிய 34 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சாதேவி என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன. பெரும்பாலும் சமூகத்தில் வலுவிழந்த மாந்தர்களைப் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன. மனித உறவுகளின் நுட்பமான இயங்கியலை பதிவு செய்கின்றன. வயதான அம்மாக்கள், குடும்பபாரம் சுமக்கும் மாமிகள், வீட்டு வேலை செய்யும் மாமாக்கள், கணவனை இழந்த விதவைகள், மாற்றுத் திறனாளிப் பெண், மரணத்துக்குப் பிந்தைய குடும்ப […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, ராம்குமார் சிங்காரம், குமுதம் புத்தகம், பக். 112, விலை 90ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html பொதுவாக 20 பக்கங்கள் எழுதி, அதன் மூலம் புரிய வைக்கக்கூடிய ஒரு கருத்தை, இரண்டே பக்கங்களில் மிக அழகாகப் புரிய வைக்க கதைகள் உதவும். அதைத்தான் நூலாசிரியர் இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். கல்கண்டு வார இதழில் தொடராக வெளிவந்து, தற்போது குமுதம் பு(து)த்தகத்தால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. முல்லா நஸ்ருதீன் கதை, தெனாலிராமன் கதை, பீர்பால் கதை என, […]

Read more

புறநானூறு மூலமும் உரையும்

புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர்., வெளியீடு டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, விலை 400ரூ. முச்சங்கத்துள் கடைசி சங்க காலப் புலவர்கள் ஆக்கிய எட்டுத்தொகை நூல்கள் எட்டாவதாகப் போற்றப்படுவது புறநானூறு. காலத்தால் அழியும் நிலையில் இருந்த இதனை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் 1894-ம் ஆண்டு முதல் முறையாக வெளியிட்டார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த நூலில் புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் எளிமையான உரையுடன் இடம் பெற்று இருப்பது, படிக்க சுவையாகவும், மிக்க பயன் உள்ளதாகவும் […]

Read more
1 2 3 4 5 8