என் உடல் என் மூலதனம்

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.

மருந்தென வேண்டாவாம் தன்னுடலைக் குறித்த புரிதலும் வணிக மருத்துவத்தை நிராகரித்தலும் இயற்கையைச் சார்ந்திருத்தலும் மிகப்பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்கிறார் நூலாசிரியர் போப்பு முன்னுரையில். இயற்கை மருத்துவம், மாற்று மருத்துவ ஆர்வலர் இவர். உடலோடு பேசுங்கள் என்பதுதான் இந்த நூலின் ஆதார சுருதி. உடலில் தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு பத்துநிமிடம் கூடுதலாகக் குளியுங்கள் என்பதில் ஆரம்பித்து நடை மேற்கொள்வதை விட ஓர் ஆராக்கியமான நண்பன் கிடையாது என்று சொல்லி விளங்க வைப்பதுவரை போப்பு உற்ற நண்பன் போல் தன் அனுபவங்களைச் சொல்கிறார். மனித உடல் பற்றிய ஒருவித புரிதலை உண்டு செய்கிறார். நோயைக்கண்டு அஞ்ச வேண்டாம். அது ஆற்றலைப் பெருக்க வந்த ஒரு சோதனைக் களம் என்கிறார். அமெரிக்க மருத்துவர் லிண்டாவின் கருத்துகள், காந்தியின் சத்திய சோதனை போன்றவற்றிலிருந்து கற்றுக்கொண்டவற்றை இந்நூலில் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் அவர். உடல் பற்றியு புரிதலுக்காக வாசிக்க வேண்டிய நூல். நன்றி: அந்திமழை, 1/7/2015.  

—-

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை!, ஆர். பத்மநாபன், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.

பணத்தை சிக்கனமாக செலவழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டு வந்து சேர்க்கப்போகும் வழிமுறைகள் கொண்ட நூலாகும். அதற்கான சில சூத்திரங்களும் இதில் தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 8/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *