பொலிவியன் டைரி

எர்னஸ்டோ சே குவோ, பொலிவியன் டைரி, தமிழில் என். ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 220ரூ.

புரட்சியாளனின் இறுதி நாட்கள் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023534.html ஆங்கிலத்தில் வெளிவந்த பொலிவியன் டைரி என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சி இயக்க வீரரான சே குவேராவின் கடைசிக் கட்ட போராட்டமான பொலிவிய விடுதலைப் போராட்டத்தை (1966 ஆம் நவம்பர் முதல் 1967 அக்டோபர் வரை) அவர் தன் கைப்பட எழுதிய நாட்குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். அர்ஜென்டினாவின் ரொசாரியா நகரில் 1928ல் பிறந்து பின்னர் மெக்சிகோவில் பிடல்காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி கியுபா புரட்சியில் சே பங்குகொண்டது அனைத்தும் புரட்சிகர வரலாற்றுக் காவியமாக உலகில் பலரால் கொண்டாடப்படுகின்றன. உணர்ச்சிகரமான மொழியில் அமைந்த இந்நூல் மொழிபெயர்ப்பு லகுவாக உள்ளது. நன்றி: அந்திமழை, 1/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *