கடலும் கிழவனும்
கடலும் கிழவனும், எர்னஸ்ட் ஹெமிங்வே, மொழிபெயர்ப்பு ச.து.சு.யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ.
வயதில் முதிய மீன்பிடிக் கிழவர் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் தொடர்ந்து கடலுக்குச் சென்றும் மீன் சிக்காத துரதிர்ஷ்டம் நேர்கிறது. அந்த துரதிர்ஷ்டம் பிடித்த கிழவருக்கு உதவியாளனாக இருப்பதற்குக்கூட யாரும் விரும்பாத நிலையில், மீனைத் தேடி ஆழ்கடலுக்குள் செல்கிறார். 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கும் போராட்டம்தான் இக்கதை. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார். ஆனால் அவரால் மீனைக் கரைக்குக் கொண்டுவர முடிந்ததா என்பதுதான் கதை. நாவலின் சிறப்பம்சம் ஒரு தீவிரமான சூழ்நிலையில், எதிர்மறையான நிலைமைகளிலும் போராடுவதற்கு வலுவுடன் எழும் உத்வேகம் குறித்து எழுதப்பட்ட மகத்தான படைப்பு இது. 1952ல் வெளியிடப்பட்ட இப்படைப்பு, உச்சபட்ச வார்த்தைச் சிக்கனம் மற்றும் வர்ணனைகள் கொண்ட சிறுநாவலாகும். 1954ல் இலக்கியத்துக்கான நோபால் பரிசு பெற்றது. இப்படைப்பு மூலம் எர்னஸ்ட் ஹெமிங்வே உலகம் முழுவதும் பரவலாக அறிமுகமானார். நாவலின் தர்க்கம் கியூபாவின் முன்னாள் அதிபரும் இலக்கிய ரசிகருமான ஃபிடல் காஸ்ட்ரோ தனது காரில் எப்போதும் வைத்திருந்த புத்தகங்களில் ஒன்று இது. தனது மாஸ்டர் என்று அவர் ஹெமிங்வேயை வியந்துள்ளார். இந்த நாவலின் கதை ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிழவனாக நடித்த ஸ்பென்சர் டிரேசி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். -ஷங்கர். நன்றி: தி இந்து, 20/6/2015.