ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, எஸ்.ஜெகன்னாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களை மகிழ்விக்கும் கால்நடைகளை போற்ற வேண்டும் என்று விவசாயப் பெருமக்களால் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கலும், அதையொட்டி கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றில் கால்நடைகளை வைத்து கொண்டாடும் விழாக்கள் குறித்து இந்த நூலில் எழுத்தாளர் எஸ்.ஜெகன்னாதன் சுவையாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

கடலும் கிழவனும்

கடலும் கிழவனும், எர்னஸ்ட் ஹெமிங்வே, மொழிபெயர்ப்பு ச.து.சு.யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. வயதில் முதிய மீன்பிடிக் கிழவர் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் தொடர்ந்து கடலுக்குச் சென்றும் மீன் சிக்காத துரதிர்ஷ்டம் நேர்கிறது. அந்த துரதிர்ஷ்டம் பிடித்த கிழவருக்கு உதவியாளனாக இருப்பதற்குக்கூட யாரும் விரும்பாத நிலையில், மீனைத் தேடி ஆழ்கடலுக்குள் செல்கிறார். 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கும் போராட்டம்தான் இக்கதை. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார். ஆனால் அவரால் மீனைக் கரைக்குக் கொண்டுவர முடிந்ததா […]

Read more

ஓடுகளப்போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும்

ஓடுகளப்போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும், எஸ். நவராஜ் செல்லையா, எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 528, விலை 300ரூ. தடகளம் உள்ளிட்ட பல விளையாட்டு விதிகள் குறித்த அனைத்து தகவல்களையும் அழகிய தமிழில் கொண்டு வந்திருக்கிறது இந்நூல். ஆசிரியரின் விளையாட்டுத்துறை சார்ந்த பரந்த அனுபவங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆங்கில சொற்களுக்கு இணையான விளையாட்டு கலைச்சொற்கள் இப்புத்தகத்துக்கு மெருகூட்டுகின்றன. சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் காட்டுபவர்கள்தான், இன்று பல்வேறு விளையாட்டுகளில் முன்னணி வீரர்களாகத் திகழ்கின்றனர். அதற்கு தீவிர பயிற்சியுடன் விளையாட்டு குறித்த தொழில்நுட்ப அறிவும் அவசியம். […]

Read more