புறநானூறு

புறநானூறு (புதிய வரிசை வகை),  சாலமன் பாப்பையா,  கவிதா பப்ளிகேஷன், பக். 928, விலை ரூ.800. புறநானூறு அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, அரசாட்சி, அறச்செயல்கள், உலகத்து நிகழ்ச்சிகள் எனப் பலவற்றையும் உள்ளது உள்ளவாறு எடுத்துரைக்கும் ஓர் வரலாற்று ஆவணமாகும். புதிய வரிசை வகை என்பதற்கேற்ப, மன்னர்களின் கால வரிசைப்படியோ, திணை அடிப்படையிலோ, பாடிய புலவர்களின் வரிசைப்படியோ  பாடல்கள் தொகுக்கப்படவில்லை என்பதும், மன்னர் ஒருவரைப் பற்றிய பாடல்களும் கூடத் தொடர்ச்சியாக அமையாமல் அங்கொன்றும் […]

Read more

கம்பனின் தமிழமுது

கம்பனின் தமிழமுது,சாலமன் பாப்பையா,கவிதா பப்ளிகேஷன், பக்.336, விலை ரூ.300. சாலமன் பாப்பையாவின் கம்பனின் தமிழமுது என்ற இந்நூலில், துளசி இராமாயணத்தில் உவமைகள், கம்பனும் பாரதிதாசனும், இராமாயணத்தில் அர்த்த பஞ்சகம், கம்பனில் அமரர்கள், கம்பனின் சூரியன், கம்பனின் கற்பனைகள், கம்பரும் அ.ச.ஞா.வும், மணிவாசகரும் கம்பரும், காப்பிய உதயம் என 9 முத்தான கட்டுரைகள் அடங்கியுள்ளன. துளசி இராமாயணத்தில் உவமைகள் கட்டுரையில், ராமனுக்கும் பரதனுக்கும் உள்ள பாசத்தை விளக்க, ஆமை எப்படி தனது முட்டைகளை மார்பில் வைத்துக் காக்குமோ, அதுபோல ராமன் இரவு பகல் பரதன் நினைவையே […]

Read more

கம்ப வனத்தில் ஓர் உலா

கம்ப வனத்தில் ஓர் உலா, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை175ரூ. கம்ப ராமாயணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற வியப்பு, இந்த நூலைப் படிக்கும் போது உண்டாகிறது. கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு வித்தியாசமான விஷயங்களைப் புதிய கோணத்தில் பார்த்து, அதனை ருசிகரமாகத் தந்துள்ளனர். பட்டிமன்றப் பேச்சாளர்கள், தமிழ் அறிஞர்கள் என ஒன்பது பேர் ஆக்கித் தந்து இருக்கும் இந்தக் கட்டுரைகள் நவமணிகள் போல ஜொலிக்கின்றன. கம்பனில் தாய்மை, கம்பனில் நிறுவன மேலாண்மை, கம்பனில் தேவாரம் போன்ற கட்டுரைகள் கம்ப ராமாயணத்தை […]

Read more

கம்பனைத் தேடி

கம்பனைத் தேடி, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 175ரூ. பிர்மஸ்ரீ வாசுதேவ் கோவிந்தாச்சார்யா, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்பட 9 பேரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கம்பனில் சட்டம் என்ற கட்டுரை, ராம காவியத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் நிகழ்த்திய சூழ்ச்சிகள் எந்தெந்த குற்றப் பிரிவுகளில் வருகின்றன? தசரதன் கைகேயிக்குக் கொடுத்த வாய்மொழி ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா? கம்பனின் படைப்பில், தசரதனின் காலத்திலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்த விதம் போன்றவற்றை விளக்கி நம்மை வியக்க […]

Read more

இவர்கள் நோக்கில் கம்பன்

இவர்கள் நோக்கில் கம்பன், சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக். 352, விலை 200ரூ. மதுரை கம்பன் கழகம், 2012ல் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவுகளின் சாரம் இந்நூல். கம்பனும் திருமூலரும் (சொ.சொ.மீ. சுந்தரம்), கம்பனில் காலமும் கணக்கும் (தெ. ஞானசுந்தரம்), கம்பனும் வில்லியும் (ம.பெ. சீனிவாசன்), கம்ப ராமாயணமும் நாலடியாரும் (இளசை சுந்தரம்), கம்பனில் அங்கதன் (கு. ராமமூர்த்தி), கம்பனும் பைபிளும் (எஸ். ராஜா), கம்பனும் உரையாசிரியர்களும் (மு. அருணகிரி), கம்பரும் கிறிஸ்தவக் கம்பரும் […]

Read more