பஞ்ச நாராயண கோட்டம்

பஞ்ச நாராயண கோட்டம், காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், பக். 720, விலை 300ரூ. சமண சமயத்தின் கேந்திரமான ஹொய்சாள சாம்ராஜ்யம், வைணவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அங்கு அழகு வாய்ந்த பஞ்ச நாராயண கோட்டங்கள் உருவாக்கப்பட்டதை கோவையாகச் சித்திரிக்கிறது இந்த நாவல். குலோத்துங்க சோழனின் சைவ வேட்கைக்கு அடிபணியாது, வைணவ ஆச்சார்யார் ராமானுஜர், திருவரங்கத்திலிருந்து ஹொய்சாளத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கு சமண மன்னரான பிட்டி தேவனின் மகளான வசந்திகாவைப் பிடித்திருந்த பேயை விரட்டி நோயை விரட்டியதால், வைணவத்தைத் தழுவினான் பிட்டிதேவன். தனது பெயரையும் விஷ்ணுவர்த்தனன் என […]

Read more

தொட்டிக் கட்டி வீடு

தொட்டிக் கட்டி வீடு, இரா. வடிவேலன், கௌதம் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 95ரூ. கொங்குநாடு என்றழைக்கப்படும் தமிழகத்தின் மேற்குப் பகுதியான கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராம மக்களின் கலாசாரம், பண்பாடு, உறவுமுறை, சமுதாய அமைப்பு போன்றவற்றை கதையின் களமாக வைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். ஈரோடு அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் கவுண்டர் இன மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இந்த நாவல். கொங்கு வட்டார வழக்கில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளின் […]

Read more

யுரேகா கோர்ட்

யுரேகா கோர்ட், இரா. நடராசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 158, விலை 150ரூ. 2014ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இரா. நடராசனின் சிறந்த படைப்பு. தொழில்நுட்ப வசதிகள் பெருகியதால் குழந்தைகளுக்கும் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், அவர்களைப் படிக்க வைப்பதற்காக அறிவியலையும், செயல்விளக்கங்களையும் பயன்படுத்தியிருக்கும் உத்தி மிகவும் பிரமாதம். அவர்களைப் புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாக அமைந்துள்ள எழுத்து நடை, இந்நூலின் தனிச்சிறப்பு. கதைகளின் ஊடே அறிவியல் தகவல்களைப் […]

Read more

நாடாளுமன்றத்தின் கதை

நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் புதுத்தகம் வெளியீடு, பக். 408, விலை 240ரூ. இந்திய பாராளுமன்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் வரலாற்றுப் பின்னணியை அறிந்திருக்க வேண்டும். இந்தியாவை உருவாக்கிய சட்டங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் தெரிந்தவராக அருணகிரி விளக்குகிறார் என்பதை நாடாளுமன்றம் அமைந்த விதத்தை அவர் விளக்கும்போதே நிரூபணமாகிவிடுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, தலைமைச் செயலாகம், தலைவர்கள், பிரதமர்கள், நாடாளுமன்ற நடைமுறைகள், தேர்தல் ஆணையம், ஆணையர்கள், தேர்தல் நடைமுறைகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உரிமைகள், […]

Read more

இந்துமதம்

இந்துமதம், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 440, விலை 300ரூ. இந்து மதம் என்பது பல்வேறு சமயக் கொள்கையின் ஒருமைப்பாடு என்பதை தமிழ் உலகிற்கு நிறுவும் அரிய முயற்சி இந்நூல். பல மெய்ஞானிகள், நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், ஆலய தரிசனம், தீர்த்த யாத்திரை என்றெல்லாம் பலவகையான எண்ணிறந்த வழிமுறைகளை நம் இந்து சமய நெறியில் எதற்காக எடுத்து வைக்கப்பெற்றுள்ளன என்பதை இந்நூலைக் கற்போர் யாவரும் புரிந்து கொள்வர். பலதரப்பட்ட மக்கள் வாழும் நம் சமூகத்தில் […]

Read more

திரௌபதி

திரௌபதி, யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி, பக். 368, விலை 200ரூ. பாரதத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் வெறும் கதையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்வையும், அப்போது நிலவிய அதிகாரப் போட்டியையும் வெளிப்படுத்தும் ஆவணம். மகாபாரதம், காலந்தோறும் புதிய வடிவில் மீள்பார்வைக்கும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதினமே இந்நூல். நூலாசிரியர் யார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் மகாபாரக் கதையின் மைய நாயகியான திரௌபதியை ஆதார விசையாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். திரௌபதியின் […]

Read more
1 6 7 8