பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி, ப்ராணா, கௌதம் பதிப்பகம், விலை 66ரூ. சின்னச் சின்னதாய் பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு. சாதாரண மக்களின் வாழ்வியலோடு நகரும் கதைகள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோரும் சந்தித்திருக்கக்கூடிய நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விளம்பர வீதி

விளம்பர வீதி, ந. அருள், கௌதம் பதிப்பகம், பக். 88, விலை 45ரூ. நூலாசிரியர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதுடன் நியூசிலாந்து, லண்டனில் விளம்பர வகைப்பாடுகள் மற்றும் விளம்பர உத்திகள் குறித்து பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் நூல் முழுவதும் தெரிகிறது. கல்வெட்டுகள், மரசறைதல், தண்டோராபோடுதல் போன்ற விளம்பரங்கள், கால மாற்றத்துக்கு ஏற்ப சுவரொட்டி, விளம்பரத்தட்டி, பதாகைகள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள் என விரிவாக்கம் பெற்று வளர்ந்ததை தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன்முதலாக 1878இல் விளம்பரம் இடம்பெற்றது என்பன போன்ற […]

Read more

தொட்டிக் கட்டி வீடு

தொட்டிக் கட்டி வீடு, இரா. வடிவேலன், கௌதம் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 95ரூ. கொங்குநாடு என்றழைக்கப்படும் தமிழகத்தின் மேற்குப் பகுதியான கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராம மக்களின் கலாசாரம், பண்பாடு, உறவுமுறை, சமுதாய அமைப்பு போன்றவற்றை கதையின் களமாக வைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். ஈரோடு அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் கவுண்டர் இன மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இந்த நாவல். கொங்கு வட்டார வழக்கில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளின் […]

Read more

நாளும் நாளும் நல்லாசிரியர்

நாளும் நாளும் நல்லாசிரியர், வெ. கணேசன், வி.கே. கார்த்திகேயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 386+22, விலை 250ரூ. மேட்டுப்பாளையம் கல்லாறு என்ற இத்தில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் நிறுவிய மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் நல்லாசிரியர் வெ. கணேசன் எழுதிய, From A Good Teacher to A Great Teacher என்ற ஆங்கில நூலினை தமிழைசிரியர் வி.கே. கார்த்திகேயம் மொழி பெயர்த்து, நாளும் நாளும் நல்லாசிரியர் என்ற தலைப்பில் தந்துள்ளார். ஆசிரியர்கள், நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவதுடன், மாணவர்களையும் […]

Read more