விளம்பர வீதி
விளம்பர வீதி, ந. அருள், கௌதம் பதிப்பகம், பக். 88, விலை 45ரூ.
நூலாசிரியர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதுடன் நியூசிலாந்து, லண்டனில் விளம்பர வகைப்பாடுகள் மற்றும் விளம்பர உத்திகள் குறித்து பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் நூல் முழுவதும் தெரிகிறது. கல்வெட்டுகள், மரசறைதல், தண்டோராபோடுதல் போன்ற விளம்பரங்கள், கால மாற்றத்துக்கு ஏற்ப சுவரொட்டி, விளம்பரத்தட்டி, பதாகைகள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள் என விரிவாக்கம் பெற்று வளர்ந்ததை தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன்முதலாக 1878இல் விளம்பரம் இடம்பெற்றது என்பன போன்ற பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. விளம்பரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போன்று விளம்பரம் செய்யப்படும் பொருளின் உண்மைத் தன்மையும் முக்கியம் என்கிறார் நூலாசிரியர். விளம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்கும் சாடுகள் என்ற வகையில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மன்னணியில் உள்ளன என்கிறார் அவர். விளம்பரத்தின் வலிமை, அதன் உத்தி, சந்தைப்படுத்தும் பொருள்களுக்கேற்ப அதன் மொழி, நிறுவனங்களிடமிருந்து தொகைகளைப் பெறுவது, பத்திரிகைகளுக்கு உரிய கட்டணத்தை அளிப்பது உள்ளிட்ட விளம்பரம் தொடர்பான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருப்பது நூலை ஆழமாக்குகிறது. தமிழில் விளம்பர உலகம் குறித்த நூல்கள் குறைவு. அந்த வெற்றிடத்தை இந்நூல் தீர்த்து வைக்கிறது. நன்றி: தினமணி, 14/3/2016.