நாளும் நாளும் நல்லாசிரியர்
நாளும் நாளும் நல்லாசிரியர், வெ. கணேசன், வி.கே. கார்த்திகேயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 386+22, விலை 250ரூ.
மேட்டுப்பாளையம் கல்லாறு என்ற இத்தில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் நிறுவிய மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் நல்லாசிரியர் வெ. கணேசன் எழுதிய, From A Good Teacher to A Great Teacher என்ற ஆங்கில நூலினை தமிழைசிரியர் வி.கே. கார்த்திகேயம் மொழி பெயர்த்து, நாளும் நாளும் நல்லாசிரியர் என்ற தலைப்பில் தந்துள்ளார். ஆசிரியர்கள், நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவதுடன், மாணவர்களையும் அவ்வாறு உருவாக்க வேண்டும். சொல்லாலும், செயலாலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைதல் வேண்டும். ஆசிரியர்கள் கேள்வி கேட்பவராக மட்டும் அமைந்துவிடாமல், கேள்விகளை கேட்குமாறு மாணவர்களை ஊக்கப்படுத்துபவராகவும் இருத்தல் வேண்டும். கேள்விகளே சிந்தனையை வளர்க்கும். தொடர்ந்த முயற்சியாலும், பயிற்சியிலும் நினைவாற்றலை வளர்த்துக்கொண்டு மாணவர்கள் முன்னேற ஆசிரியர்கள் துணை புரிதல் வேண்டும். ஆண்டு முழுவதற்கும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிந்திப்பதற்கு ஏற்ப மாதம், தேதி, குறிப்பிட்டு வரிசையாக கருத்துக்களை தொகுத்தளித்துள்ள முறை நன்று. இதன் கண் இல்லாதது இல்லை என்று சொல்லுமாறு ஆசிரியர்கள் தொடர்பான அனைத்து கருத்துகளும் விளக்கப் பெற்றுள்ளன. இந்நூலினை வாங்கிப் படிக்கும் ஆசிரியர்களிடத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் மாணவர்கள் மதிக்கும் சிறப்பும் ஏற்படும். நூலாசிரியர் பாராட்டுக்குரியவ்ர். -ம.நா. சந்தானகிருஷ்ணன்.
—-
நேசிக்கிறேன், க. விஜயபாஸ்கர், கௌதம் பதிப்பகம், பக். 100, விலை 45ரூ.
உள் மனதில் அனைவருக்கும் நிழலாடும் காதலை ஆசிரியர் கவிதைகளாக்கி உள்ளார். அதற்கு ஆசியாக அந்துமணி தன் முன்னுரையில், காதல் என்ற இந்த மாயாஜால வார்த்தைக்குதான் எத்தனை வீரியம்… என்று கேள்வி எழுப்பி ஆசிரியர் தொகுப்பு முத்தாய் அமைந்து இருக்கிறது என்கிறார். உதாரணமாக குடைக்கு இனி அவசியமில்லை இடைவெளிகள் அதிகமாயின… என்ற கவிதை போதும். இது தினமலர் வாரமலர் பகுதியில் வெளியானது. நூலின் தலைப்பில் அமைந்த கவிதையில், நேசத்தையும் பகல்வேசத்தையும் விளக்கும் கவிஞரின் கருத்தை, காதலில் மூழ்கிப்போன பலரும் எளிதாக புரிந்து கொள்வர். கவிதைப்பிரியர்களை கவரும் நூல். நன்றி: தினமலர், 2/2/2014. நாளும் நாளும் நல்லாசிரியர், வெ. கணேசன், வி.கே. கார்த்திகேயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,