கரைக்கு வராத மீனவத் துயரம்
கரைக்கு வராத மீனவத் துயரம், வறீதையா சான்ஸ்தத், உயிர் எழுத்து.
துன்பக்கடல். இந்த நூல் விளிம்பு நிலை மக்களும் பழங்குடிகளை ஒத்தவர்களுமான மீனவர்களின் துயரங்களும் அவர்தம் பாடுகளும் குறித்து பதிவு செய்கிறது. சிறை, கைது, துப்பாக்கிக் குண்டுகள், படகு பறிமுதல், வலையறுப்பு, தொடர்த் தாக்குதல் என்று ஓயாமல் இலங்கை கடற்படையால் துன்பம் அனுபவிக்கும் மீனவ சமுதாயத்தின் வலிகளை பிரதிபலிக்கும் பல கட்டுரைகள் இந்நூலில் உள்ளது என இந்நூலை வெளியிட்டுள்ள உயிர் எழுத்து பதிப்பகத்தைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். நன்றி: இந்தியாடுடே, 29/1/2014.
—-
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் தத்துவ நூல் தொகுதிகள்-ஒரு கண்ணோட்டம், மு.பா. எழிலரசு, கலைச்செல்வி பதிப்பகம், டி1, 3வது குறுக்குத் தெரு, டர்ன்புல்ஸ் சாலை, நந்தனம், சென்னை 35, பக். 108, விலை 75ரூ.
டாக்டர் அம்பேத்கரின் நூல் தொகுப்புகள் என்னென்ன இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியில் என்னென்ன பொருள் குறித்து எவ்வித தலைப்புகளில் படைப்புகள் உள்ளன. அதன் சாரம் என்ன என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது நூலாசிரியர் அவா. அம்பேத்கர் பற்றி எண்ணற்ற நூல்கள் வெளிவந்திருந்தாலும் இந்நூல் அம்பேத்கர் நூல்கள் பற்றிய சாராம்சத்தை அலசி ஆராய்வதால் கவனத்துக்குரியதாகிறது. நன்றி: குமுதம், 29/1/2014.