மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் பண்டைத் தமிழக வரலாறு, சேரர் – சோழர்- பாண்டியர், (20 தொகுதிகள்), பதிப்பு வீ. அரசு, தமிழ்மண் பதிப்பகம், விலை 5495ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024249.html ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அந்த இன வரலாற்றை தொல்லியல், கல்வெட்டு, பண்பாட்டு அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிக் குவித்த ஒரு சில ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900 – […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ மகான்களும் மாபாவிகளும் வலம் வரும் காவியம் மகாபாரதம். வியாசன் வடித்தது. அதனுடைய கதைச் செழுமையால் அனைத்து மொழிகளாலும் அரவணைக்கப்பட்டது. வில்லிபுத்தூரார் பாடல்களாக வடித்தார் தமிழில். வசனமாக கொண்டுவந்து தந்தார் கும்பகோணம் ராமானுசாச்சாரியார். அதிலுள்ள அறத்தை சாறு பிழிந்து கொடுத்தார் நா. பார்த்தசாரதி. கதையை நாடக பாணியில் வர்ணித்தார் பழ. கருப்பையா. இதோ, பிரபஞ்சன் தன்னுடைய கதா ரசனைப்படி மகாபாரத மனிதர்களை நம் மனக்கண் முன் கொண்டுவந்துள்ளார். உலகத்தின் முதல் தன் வரலாற்றை வியாசரே எழுதியிருக்கிறார். […]

Read more

நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம்

நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம், மனோகர் தேவதாஸ், தேனி சீருடையான், விகடன் பிரசுரம், விலை 350ரூ. இந்தியாவும் விடுதலையும், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு என்று எழுதிக் குவித்த திரு.வி.க.வுக்கு முதுமையில் பார்வை லேசாக மங்க ஆரம்பித்தது. அதற்காக, எழுதிய கை சும்மா இருக்குமா? பார்வை குறைந்த பிறகுதான் இருளில் ஒளி படைத்தார். படைப்பாளிக்கு சிந்தனைதான் பார்வையே தவிர, கண் அல்ல. இதோ இரண்டு படைப்பாளிகள். ஒருவர் இருளில் அனுபவித்த வாழ்க்கையை வெளிச்சம் பெற்றதும் நாவல் ஆக்கி இருக்கிறார். […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : http://www.nhm.in/shop/1000000022780.html ஏவி. எம். அறக்கட்டளை சார்பில் கம்பன் விழாவை ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2014 ஜுலை மாதம் நடைபெற்ற கம்பன் விழாவில், இந்நூலாசிரியர் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பே இந்நூல். சென்னை உயர் நிதிமன்றத்தின் நீதிபதியான இந்நூலாசிரியர், நீதித் துறையில் மட்டுமல்ல, இலக்கியம், இசை, ஆன்மீகம், இந்தியக் கலாச்சார மரபு, […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023988.html நடிகர்களை விரும்பும் ரசிகர்கள் உண்டு. அதாவது விசிறிகளைச் சொல்கிறேன். ஆனால் நடிகரை விரும்பும் நடிகர் இருப்பது, அதாவது நடிகருக்கே ஒரு நடிகர் விசிறியாக இருப்பது ஆச்சர்யமானது. பாலையாவின் நடிப்பில் மயங்காத நடிகர்களே கிடையாது என்று சொன்னவர் சாதாரணமானவர் அல்ல. நாடகச் செம்மல் என்று புகழப்பட்ட அவ்வை டி.கே. சண்முகம். எவ்வளவு பெரிய நடிப்பு ஜாம்பவான்களுடன் […]

Read more

கடல் கிணறு

கடல் கிணறு (சிறுகதைகள்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 79, விலை 60ரூ. கேள்விகளை எழுப்பும் கதைகள் அடக்குமுறையின் மாமிசத்தைப் பிய்த்துத் துப்பும் கதைகள்: வாசிப்பதோடு விவாதிக்கவும் வேண்டியவை. நிர்ப்பந்தங்களுக்கு அப்பால் வாழ்வை அதன் மங்கலான பிம்பங்களில் இருந்து பதிவு செய்வதாய் எழுதப்பட்டிருக்கும் ஒன்பது கதைகளைக் கொண்டிருக்கும் ரவிக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான கடல் கிணறு இந்தக் காலகட்டத்தில் வாசிப்பதோடு விவாதிக்கப்படவும் வேண்டிய புத்தகம். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் முக்கியமான ஆக்கங்களைத் தந்துள்ள ரவிக்குமாரின் இந்த கதைகள் பெரும்பாலும் […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 392, விலை 350ரூ. இளைஞனும் ஆசாபாசங்களும் தமிழ் புனைகதையில் இதுவரை இல்லாத பல புதிய பரிமாணங்களை முன்வைக்கும் நாவல். செல்வம், செல்வாக்கு முதலியன இலக்காகக் கொள்ளாமல் யோகாசனம், சமூக சேவை ஆகியவற்றை நாடிப் பெற்றோரிடம்கூடக் கூறாமல் ஓர் ஆசிரமத்தில் சேரும் இளைஞனின் கதை. ஏற்கனவே பல யோகாசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆசிரமத்தின் கிளைகள் எனக் கூறப்படுபவைக்கு அனுப்பப்படுகிறான். ஒரு சமூகக் கிளர்ச்சியில் ஒரு கட்டத்தில் காவல் துறையும் துணை வராது […]

Read more

தடித்த கண்ணாடி போட்ட பூனை

தடித்த கண்ணாடி போட்ட பூனை, போகன் சங்கர், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. அவர்களை மன்னியும் அவர்கள் தாம் செய்வது (எழுதுவது) இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். அவர்களை மன்னியும்! சிறுவயதுதொட்டு அவரை நான் பார்த்திருக்கிறேன். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். அவரிடம் ஒரு சைக்கிள் உண்டு. அந்த சைக்கிளை அவர் ஒட்டி நான் பார்த்ததே கிடையாது. ஏனெனில் அவருக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. வாழ்நாள் முழுக்க அவர் அந்த சைக்கிளை உருட்டிக் கொண்டே திரிந்தார். மற்றவர் ஓட்டினால், பின்னால் உட்கார்ந்திருப்பார். போதையான […]

Read more

உல்லாசக் கப்பல் பயணம்

உல்லாசக் கப்பல் பயணம், கிருத்திகா, தமிழ் காமிக்ஸ் உலகம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024753.html உல்லாசக் கப்பல் பயணம் ஓர் அனுபவம் ஆசியாவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்து மக்கள் மத்தியிலும் கேளிக்கைகள் மற்றும் உல்லாசச் சுற்றுல்லாக்கள் இக்காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் க்ரூஸ் என்றழைக்கப்படும் உல்லாசக் கப்பலில் ஐந்து நாட்கள் மேற்கொண்ட பயண விவரங்களைச் சற்று கற்பனை கலந்து இந்நூலில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிருத்திகா எழுதியுள்ளார். ஒரு உல்லாசக் கப்பல் எப்படியிருக்கும் என்பதைச் சராசரி மக்கள் […]

Read more

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள்

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள், ச. சிவலிங்கம், புலம் வெளியீடு, விலை 180ரூ. இரு துருவங்களின் இணைப்பு சாதியின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பைப் பற்றிதான் எவ்வளவு விவாதங்கள்! சாதியும் வர்ணமும் மனித நாகரிகத்துக்கு இந்தியா அளித்துள்ள கொடை என்று உலகத்திடம் விவாதிக்கிற இந்திய அறிவாளிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும், நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. தலித் சுயமரியாதை சக்தியின் மூலமாக மக்கள் பணியாற்றும் இந்த நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி ஆசிரியரும்கூட. அவர் இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர். ஆனால், சமூகப் […]

Read more
1 3 4 5 6 7 8