சங்கரன் கோவில்
சங்கரன் கோவில், மங்கையர்க்கரசி பதிப்பகம், விலை 600ரூ.
சங்கரன் கோவில் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர். அந்த ஊரின் திருக்கோவில், அந்த நகரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் அ. பழநிசாமி ஆற்றிய பணிகள், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர் என நகரின் முதல் பட்டதாரிகள், சங்கரன் கோவிலில் பிறந்த தமிழ் அறிஞர்கள் தேவநேயப் பாவாணர், இ.மு. சுப்பிரமணியம், முதல் திரையரங்கம், 62 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் பஸ், நெசவுத் தொழில் வளர்ந்த கதை என சங்கரன்கோவிலில் நிகழ்ந்த அனைத்துச் செய்திகளையும் ஒன்றுவிடாமல் மண் வாசனையோடு இந்த நூலில் அ. பழனிசாமியும், ப. அருணகிரியும் பதிவு செய்துள்ளனர். நீண்ட நெடிய உழைப்புக்கு பின்னால் இந்த நூலை அவர் உருவாக்கி இருக்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது புரிந்து கொள்ள முடிகிறது. கண்ணைக் கவரும் 600க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. ஒரு ஊரைப் பற்றி இத்தகைய பிரமாண்டமான புத்தகம் வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.
—-
பார்மெட் நியூமராலஜியின் தொடக்கம், மஹாதன் ஷேகர் ராஜா, சென்னை, விலை 500ரூ.
எந்தெந்த மாதம், தேதிகளில் குழந்தை பிறந்தால் நல்லது, எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய திருமண தேதியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தருகிறார், நூலாசிரியர். எண்கணித சோதிடம் (யியூமரலாஜி) முறையில் சில மாற்றங்களைச் செய்தால் வாழ்வில் உன்னத நிலையை அடையலாம் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 22/7/2015.