விநாடி வினா விடை
விநாடி வினா விடை, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 275ரூ.
குழந்தைகள் பயனுள்ள முறையில் பொழுதைப் போக்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் வாண்டு மாமா எழுதியுள்ள நூல். பல்வேறு ஓவியங்கள், அதில் மாறுப்டட ஓவியங்களை குழந்தைகள் அடையாளம் காண வேண்டும் என்பது ஒரு வகை. குறிப்பிட்ட இடத்தை அடைய வழிகாட்ட வேண்டும் என்பது இன்னொரு வகை. இப்படிப் பல போட்டிகளை வைத்து அதற்கான விடைகளையும் கூறுகிறார். மேலும் குழந்தைகள் மனதைக் கொள்ளை கொள்ளும் 84 புதிர் விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.
—-
காக்காக்கடிக் கவிதைகளும் மாதவியை வாசித்தலும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 100ரூ.
கவிஞர் பெ. சாமிநாதன் எழுதியுள்ள குறுங்கவிதைகளின் தொகுப்பு. தமிழக மீனவர்கள் கடலில் மீன்களைப் பிடிக்கிறார்கள். இலங்கைப் படையினர் கடலில் மீனவர்களைப் பிடிக்கிறார்கள் பேச்சை முடி என்றாலும் முடிக்காத பேச்சாளர் உண்டு. கூந்தலை முடி என்றாலும் முடியாத பெண்கள் உண்டு என்பன போன்ற சுவையான கவிதைகள். இந்த புத்தகத்தின் பின்னிணைப்பாக மாதவியை வாசித்தலும் என்ற நெடுங்கவிதை இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.