வாராணசி

வாராணசி, பா.வெங்கடேசன், காலச்சுவடு, விலை 225ரூ. இந்தியா போன்ற நாடுகளில் வைதீகம் எல்லாவற்றையும் விழுங்கும். புதிய கதைசொல்லலின் உருவத்திலும் வைதீகம் வரும். ‘வாராணசி’ நாவல் வழியாக தன்னைச் சுற்றி ஒரு சுயசிறையைக் கட்டிக்கொண்டிருக்கிறார் வெங்கடேசன். தேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, […]

Read more