நிலம் உங்கள் எதிர்காலம்

நிலம் உங்கள் எதிர்காலம் – ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் குறிப்புகள் – சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன், பெரிகாம் பதிப்பகம், பக்.342, விலை ரூ.525.

நிலம், வீடு, மனைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும், புரோக்கர்களுக்கும் பயன்படும் நூல்.

ரியல் எஸ்டேட் தொழில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில், அதைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

நிலங்கள், நில ஆவணங்கள் பற்றிய அடிப்படை என்ற முதல் அத்தியாயத்திலேயே நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான மக்களுடைய நம்பிக்கைகளையும் உண்மையான நிலை என்ன என்பதையும் விளக்குகிறார்.

வில்லங்க சான்றிதழ் என்றால் என்ன? அதைப் பெறும் வழிமுறைகள் எவை? நிலத்தை வாங்கும்போதும், விற்கும்போதும் எவ்வளவு தொகைக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும்? உயில் சொத்து, மைனர் சொத்து, கார்டியன், பாகப் பிரிவினை, செட்டில்மென்ட் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன? பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? போலி பத்திரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? ஒரு மனைப் பிரிவுக்கு ஈபஇட அங்கீகாரம் பெறுவது எப்படி? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடைதரும் பயனுள்ள நூல்.

நன்றி: தினமணி, 1/7/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published.