குறள் விருந்து கதை விருந்து
குறள் விருந்து கதை விருந்து, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் படிக்கும் அனைவரின் மனதிலும் அது பதிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மருந்தின் கசப்பை நாக்கு ஏற்றுக் கொள்ள தேனைக் கலப்பது போல், நல்ல கருத்துகளை விதைக்க தேனான கதைகள் அவசியம் என நினைத்த நூலாசிரியர், திருக்குறளை ஒரு கதையுரையில் தந்தால் அது சிறக்கும் என்பதால், ஒரு குறளுக்கு ஒரு கதையை எழுதி விளக்கியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 108 திருக்குறள்களுக்கு 108 கதைகளை எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். […]
Read more