திருவேங்கடவன் திருநாமங்கள்

திருவேங்கடவன் திருநாமங்கள், ஸ்ரீ.உ.வே.கோழியாலம் சடகோபாசாரியார், பக். 232, விலை 150ரூ. கலியுக தெய்வமாக விளங்கும் ஸ்ரீவேங்கடவன் வழிபாட்டில், அவன் பெருமை கூறும், 108 திருநாமங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அத்திருநாமங்கள் வடசொற்களில் உள்ளன; அதன் பொருள் கூறும் நுாலாக, இந்நுால் வெளிவந்துள்ளது. வேம்+கடம் என்று பிரித்து, ‘வேம்’ என்ற சொல்லிற்கு மோட்சம் என்றும், ‘கடம்’ என்ற சொல்லிற்கு ஐஸ்வரியம் – செல்வம் என்றும் பொருள் கூறுவர். வேம் என்றால் வெந்துவிடும் என்றும், கடங்கள் என்றால் கர்மங்கள் – பாவங்கள் என்றும், இங்கு வருபவர்களின் பாவங்கள் […]

Read more

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி, சொ.சேதுபதி, வானதி பதிப்பகம்,  பக்.352, விலை ரூ.250. கம்பன் கழகங்களுக்கெல்லாம் தாய்க் கழகமாக விளங்குவது "கம்பன் அடிப்பொடி சா.கணேசனால் 1939-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம்தான். இக்கழகத்தின் மூலம் உலகம் முழுவதும் கம்ப காவியத்தைக் கொண்டு சேர்த்த பெருமை சா.கணேசனையே சாரும். இந்நூல், சா.கணேசனை வேழமாக உருவகப்படுத்தி, அவர் கம்ப காவியத்தில் கண்டஆழத்தைக் கூறி, முழுக்க முழுக்க அவர் புகழபாடியிருக்கிறது. இதுவரை அச்சு வாகனம் ஏறாமல் இருந்த சா.கணேசனின் உரையும் பாட்டும் நூல் முதன்முதலில் இந்நூலில் […]

Read more

தத்வமஸி

தத்வமஸி, பேரா.சு.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 112, விலை 150ரூ. தத்வமஸி என்றவார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில் சன்னிதி முகப்பில், இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியும். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பது தான் இதன் அர்த்தம். இறைவனும் நாமும் ஒன்று தான் என்ற, அத்வைத தத்துவத்தை விளக்கும் வாசகம். ஆதிசங்கரர் எழுதிய, ‘வாக்கிய விருத்தி’ என்ற நுாலை, ஆங்கிலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்துள்ளார். அதை தமிழாக்கம் […]

Read more

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்,சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.240, விலை ரூ. 150. வாழ்க்கை என்பது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு எனலாம். அதை நம் மனதுக்கு நெருக்கமாக உணரும் வகையில் தொகுத்துத் தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். செயற்கரிய செயல்களைச் செய்தவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான 200 சம்பவங்கள் இந்நூலில் மணம் வீசுகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் குடும்பத்துக்கு பசும்பொன்தேவர் மரியாதை கொடுத்த சம்பவத்திலிருந்து தொடங்கும் இத்தொகுப்பில், சிறுவனிடம் பாடம் கற்ற தமிழ்த்தாத்தா உ.வே.சா, அப்துல்கலாமின் பெருந்தன்மை, தியாக சீலர் கக்கன், சாதிகளை வெறுத்த ஜீவா, திரு.வி.க.வின் […]

Read more

ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?

ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?, மு.ஜோதி சுந்தரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 160ரூ. ஆங்கில இலக்கணப்பாடம் என்றால் காததூரம் ஓடும் மாணவ மாணவிகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கிராமப் புறங்களில் தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கில இலக்கணத்தை மிக எளிதாகப் புரிந்து கொண்டு படிப்பதன் மூலம் ஆங்கில இலக்கணத்தில் நிபுணத்துவம் பெற முடியும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. சின்னஞ் சிறிய வாசகங்கள் மூலம் இலக்கணத்தை கற்றுத் தருவதோடு முக்கியமான பல வார்த்தைகளின் வினைச் சொற்களுக்கு தமிழில் […]

Read more

நூற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்

நூற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், தமிழில் வண்ணப்பாடல்கள் படைத்து மகிழச் செய்த புலவருள் தலையாயவர் அருணகிரிநாதர். 15 ஆம் நுாற்றாண்டில், தமிழகமெங்கும் முருகன் புகழ்பாடி பெருமை பெற்றார். அவர் பாடியவை திருப்புகழ் எனப் போற்றப்பட்டு வருகின்றன. 16 ஆம் நுாற்றாண்டில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இராம காதையை வண்ணப்பாடல்களில் இயற்றியுள்ளார். திருமால் எழுந்தருளியுள்ள, 108 திவ்விய தேசங்களைப் பற்றிய பிரபந்தங்கள் தமிழில் நிரம்ப உள்ளன. 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாள் பெருமைகளும், தலச்சிறப்புகளும், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலியவர்களல் பாடப்பட்ட […]

Read more

திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி

திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி, பொன்.செல்லமுத்து; மணிவாசகர் பதிப்பகம், தொகுதி: 1- பக்.240; விலை ரூ.250; தொகுதி: 2.பக்.256; விலை ரூ.250; தொகுதி: 3, பக்.240;  விலை ரூ.250. கவிஞர் வாலி 1959 முதல் 2013 வரை திரைப்படங்களில் எழுதிய பாடல்கள் தொடர்பான தகவல்களின் களஞ்சியமாக இந்த மூன்று தொகுதிகளும் இருக்கின்றன. 1959 முதல் 1980 வரை 297 படங்களுக்கும், 1981 முதல் 1990 வரை 405 படங்களுக்கும், 1991 முதல் 2013 வரை 372 படங்களுக்கும் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியிருக்கிறார். இந்த பாடல்கள் […]

Read more
1 4 5 6