கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, மு.நீலகண்டன், கனிஷ்கா புக் ஹவுஸ், பக்.184, விலை ரூ.160. பெளத்தம் கொங்கு மண்டலத்தில் பரவியது பற்றியும், வீழ்ச்சியடைந்தது பற்றியும் விரிவாகப் பேசும் நூல். நூலின் தொடக்கத்தில் கொங்கு மண்டலம் அமைந்துள்ள நிலப்பகுதி,  கொங்கு என்று பெயர் வரக் காரணம்,கொங்கு நாடு குறித்து தமிழ் இலக்கியங்களான பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் காணப்படும் இலக்கியச் சான்றுகள், கொங்கு மண்டலத்தில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள்,சேர, சோழ, பாண்டியர்கள், விசய நகர அரசுகள் குறித்த வரலாற்றுச் […]

Read more

தமிழ்மந்திரம்

தமிழ்மந்திரம், பாலூர் கண்ணப்ப முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 275ரூ. உலகிற்கே ஒரு மந்திரம் திருமந்திரம். மந்திரத்திற்குரியது சமஸ்கிருதம் மட்டுமே எனும் கூற்றைப் பொய்யாக்கிய ஒரே மந்திரம், திருமூலர் இயற்றிய திருமந்திரம். திருக்குறளும், திருமந்திரமும், திருவாசகமும் தமிழின் ஞானக்கருவூலங்கள். புலமைக் கடலாகவும், சாத்திர ஞானச்செறிவு உடையவராகவும் திகழ்ந்த பாலுார் கண்ணப்ப முதலியார், இந்நுாலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். சைவப்பெரியார்கள் வகுத்தவாறு, 10ம் திருமுறையாகத் திகழும் திருமந்திர நுாலில் உள்ள, 304 திருமந்திரங்களும், திருமூலர் பாடியதாகக் கருதப்படும் வயித்தியப் பகுதி நுாலிலிருந்து, 25 மந்திரங்களும் விளக்கத்துடன் […]

Read more

தெய்வப் புலவர் திருவாய்மொழி

தெய்வப் புலவர் திருவாய்மொழி, அரங்க. இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.656, விலை ரூ.500. திருக்குறளின் சிறப்பையும், மாண்பையும் தமிழறிஞர்கள் மட்டுமல்ல, எல்லீஸ், ஜி.யு.போப் முதலிய வெளிநாட்டவர் பலரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு போற்றி உரைத்துள்ளனர். மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். திருக்குறளில் உள்ள பல்வேறு சிறப்புகளை குறிப்பாக, நூலின் அமைப்பு, திறனாய்வு குறித்த விவரங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள், அதில் இடம்பெற்றுள்ள உவமைகள், அணிநயங்கள், பாயிரத்தில் திருவள்ளுவர் கூறும் இறை, அறிவு பற்றிய கருத்துகள்,  உலகியல் பார்வையோடு கூடிய துறவு அதிகாரத்தின் சிறப்பு, திருக்குறளை எடுத்தாண்ட புலவர்களின் கருத்துகள், பல்வேறு […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, முனைவர் சே.சாதிக், யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக். 512, விலை 400ரூ. ஒவ்வொரு மனிதனும் ஒரு கதைச் சுரங்கம். துன்பத்தாலோ, தோல்வியாலோ, மகிழ்ச்சியாலோ, கிளர்ச்சியாலோ பாதிக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஆழ்மனதில் கெட்டியாகப் பதிந்து விடுகின்றன.சொல்லி மகிழவும் அழவும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் உள்ளன. தன் வாழ்க்கையில் நடந்தவை பிறரது திருத்தமான வாழ்வுக்குப் பயன்படக்கூடும் என்று எண்ணுபவர்கள் அவற்றை நுாலாக ஆவணப் படுத்துகின்றனர். மற்ற சில செல்வாக்கினரின் வாழ்க்கையைப் பிறர் முன்வந்து நுாலாக்குவதும் உண்டு. சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் […]

Read more

பிரச்சனைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

பிரச்சனைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள், ராபர்ட் எச்.ஷுல்லர், தமிழில்: தர்மகீர்த்தி, பக்.264, விலை ரூ.210. அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் எச்.ஷுல்லர் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்த நூல் வெளிவந்துள்ளது. யாருக்குத்தான் பிரச்னைகள் இல்லை? ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பாகுபாடின்றி எல்லாருக்குமே பிரச்னைகள் உண்டு. அவற்றை நேர்மறைச் சிந்தனையோடு எதிர்கொள்பவர்கள்தான் வெற்றிகொள்ள முடியும் என்பதை ராபர்ட் எச். ஷுல்லர் தனது வாழ்க்கையில் சந்தித்த சில மோசமான தருணங்களையும், அவற்றில் இருந்து அவர் மீண்டு வந்ததையும் எடுத்துக்காட்டி விவரித்துள்ளார். அவருக்கு தெரிந்தவர்கள், பின்னாளில் […]

Read more

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வாழ்வியல் கட்டுரை, வித்யா சாகர், முகில் பதிப்பகம்,  பக்.144, விலை ரூ.125. நிம்மதி: கிலோ நாலு ரூபாய்,  உடம்பு ஓர் ஆயுதம்: ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப் போர் புரிவோம் வசவு: வசவு வாங்கலையோ வசவு, எல்லோரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் – இவ்வாறு வித்தியாசமான பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நம்மை நாம் எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றஅடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் அனுபவம் […]

Read more

தந்த்ரா ரகசியங்கள்

தந்த்ரா ரகசியங்கள், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 250ரூ. விஞ்ஞான் என்றால் உணர்வு. “பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. “தந்த்ரா என்றால் யுக்தி, வழிமுறை, டெக்னிக். அதாவது, உணர்வை கடத்திச் செல்லும் யுக்தி. மற்ற மரபுகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானதாக தந்த்ரா தெரிவது இப்படித்தான். ஜைனர்கள் சுவையே இருக்கக் கூடாது என்கின்றனர். மகாத்மா காந்தி தன்னுடைய ஆசிரமத்தில், சுவை கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தார். எதையும் சுவைக்கக் கூடாது. சாப்பிடு, ஆனால், சுவைக்காதே; சுவையை மறந்துவிடு. சாப்பிடுவது தேவையானது. ஆனால், அதை இயந்திரத் […]

Read more

முகத்தில் முகம் பதித்தோர்

முகத்தில் முகம் பதித்தோர், இளமாறன், மணிவாசகர் பதிப்பகம், பக்.192, விலை ரூ.150. முகம் சிற்றிதழில் வாழ்வில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. அவை பல தொகுப்புகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் சாதனை புரிந்த ஆற்றலாளர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியுள்ளன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் க.அன்பழகன் போன்ற அரசியல் தொடர்புள்ளவர்கள், பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன், ஒளிப்படக் கலைஞர் இரா.மணி, கல்வெட்டாய்வாளர் கோ.கிருட்டிணமூர்த்தி, தொல்லியலறிஞர் ச.கிருட்டிணமூர்த்தி, மருத்துவர் க.கோபால் போன்ற பல்வேறு துறை சார்ந்தவர்களின் […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ், பக். 300, விலை 200ரூ. தான் பார்த்ததை, ரசித்ததை, பழகி பிரமித்ததை, கலைமாமணி ஏ.ஆர்.சீனிவாசன் இந்த நுாலில் எழுதிய விதம், அனைவரையும் படிக்கத் துாண்டும்.குறிப்பாக, சிவாஜி – எம்.ஜி.ஆர்., இணைந்து கூண்டுக்கிளி திரைப்படத்தில் நடித்தது, அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இரு தரப்பு ரசிகர்கள் மோதல் காரணமாக, அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், அப்பட ஷூட்டிங் காலத்தில், டைரக்டர் ராமண்ணா, சிவாஜியை தனியாக அழைத்தார். அவரிடம், ‘எம்.ஜி.ஆர்., சீன் காட்சிகளின் போது, ஏன் வெளியில் சென்று விடுகிறீர்கள்?’ […]

Read more

பிரமபுரம் மேவிய பெம்மான்

பிரமபுரம் மேவிய பெம்மான்,  அன்பு ஜெயா, காந்தளகம், பக்.272, விலை ரூ.200. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ்பெற்றது – பிரமபுரம், தோணிபுரம், காழி, கழுமலம், சீகாழி என்றெல்லாம் போற்றப்படும் சீர்காழி திருத்தலம். சைவத்துக்கு மட்டுமல்லாமல் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த சிறப்பு இவ்வூருக்கு உண்டு. இத்திருத்தலத்திற்குக் காரணப் பெயர்களாக 12 பெயர்கள் உள்ளன. இப்பன்னிரண்டு திருப்பெயர்களும் பன்னிரண்டு யுகங்களில் விளங்கி வந்த பெயர்கள் என்று பட்டினத்தடிகள் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். வேதநெறி தழைத்தோங்கவும், சைவம் மேன்மை கொள்ளவும் அவதரித்த திருஞானசம்பந்தரால் புகழ் பெற்றது […]

Read more
1 2 3 4 5 6