முகத்தில் முகம் பதித்தோர்
முகத்தில் முகம் பதித்தோர், இளமாறன், மணிவாசகர் பதிப்பகம், பக்.192, விலை ரூ.150.
முகம் சிற்றிதழில் வாழ்வில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. அவை பல தொகுப்புகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் சாதனை புரிந்த ஆற்றலாளர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியுள்ளன.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் க.அன்பழகன் போன்ற அரசியல் தொடர்புள்ளவர்கள், பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன், ஒளிப்படக் கலைஞர் இரா.மணி, கல்வெட்டாய்வாளர் கோ.கிருட்டிணமூர்த்தி, தொல்லியலறிஞர் ச.கிருட்டிணமூர்த்தி, மருத்துவர் க.கோபால் போன்ற பல்வேறு துறை சார்ந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
சாதனையாளர்களின் பிறப்பு, கல்வி, அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள், அவர்களுடைய குறிப்பிடத்தக்க சாதனைகள், அவர்கள் பெற்ற பட்டங்கள், விருதுகள் என அனைத்தும் தொகுத்தளிக்கப்பட்ட இத்தொகுப்பு, எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இளம் தலைமுறையினருக்கு ஊட்டும் என்பதில் ஐயமில்லை.
பல்வேறுதுறைகளில் நிகழ்ந்த, நிகழும் மாற்றங்கள், வளர்ச்சிகளையும் கூட இந்த நூலின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: 10/6/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029512.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818