திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பை தமிழர்கள்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பை தமிழர்கள், அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், பக். 240, விலை 240ரூ. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை விரிவாக்கி, தமிழர் உழைப்பால் இன்றைய மும்பை வளர்ச்சி பெற்றதை, இந்த நுாலில் ஆசிரியர் விளக்குகிறார். மும்பை, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர். துறைமுகத் தொழிலாளர்கள் மூலம் மிகப்பெரும் இடத்தைப் பிடித்த வரதராஜ முதலியார், மும்பைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய முன்னோடி சு.கந்தசாமி, ‘கலியுக வரதன்’ என்ற பட்டத்தை பெற்றவர் எனப் பலரது உழைப்பு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரப் […]

Read more

இது சிக்ஸர்களின் காலம்

இது சிக்ஸர்களின் காலம்,  ராம் முரளி; யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.224, விலை ரூ.250. தற்போது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடங்கி நடைபெறும் நிலையில் கிரிக்கெட் சீசன் உச்சகட்டத்தில் உள்ளது. கிரிக்கெட் ஆட்டங்களில் துரிதமாக ரன்களைக் குவிக்க பவுண்டரிகள், சிக்ஸர்கள் உதவுகின்றன. தற்போது ஏராளமான சிக்ஸர்கள் அடிக்கப்படுவதால், இது சிக்ஸர்களின் காலம் என நூலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது போலும். தற்காலத்தில் கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன் (இந்தியா) கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்), பாபர் ஆஸம் […]

Read more

வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, இராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 150, விலை 120ரூ. வேளாண் துறையில் வியத்தகு சாதனைகளைச் செய்த வேளாண் காதலர் வெங்கடபதி, ஒன்பது மாதங்கள் மட்டும், நான்காம் வகுப்பு படித்தவர்; பின் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால், பெற்ற பட்டறிவு ஏராளம். மூன்று ஜனாதிபதியால் பாராட்டப் பெற்றவர். 2012ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் வேளாண் விஞ்ஞானி. கனகாம்பரம், வெங்கடபதியின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, கனகாம்பர மலரில் வகை வகையான கண்டுபிடிப்புகளால், இன்று விவசாயியின் வாழ்க்கை வளமாகி […]

Read more

நிறம் மாற்றும் மண்

நிறம் மாற்றும் மண்,  இயகோகா சுப்பிரமணியன்; நமது நம்பிக்கை வெளியீடு,பக்.208; விலை ரூ.120. அமெரிக்காவுக்குப் பலமுறை சென்ற நூலாசிரியர், பயணக் கட்டுரையாக எழுதாமல், அமெரிக்காவில் போக்குவரத்து காவலரின் பணிகள், நீதித்துறையின் செயல்பாடுகள், சிறைச்சாலைகள் செயல்படும் விதம், துப்பாக்கி வைத்துக் கொள்ளும் முறை, கருப்பின மக்களின் வாழ்க்கை முறை, அங்கு வாழும் தமிழரின் பண்பாட்டுச் செயல்பாடுகள், பெண்களின் நிலை, மருத்துவத்துறை செயல்படும் விதம், அரசியல்வாதிகளின் செயல்கள் என அமெரிக்காவின் பல்வேறு முகங்களை நமக்கு விளக்கிச் சொல்கிறவிதத்தில் இந்நூலை எழுதியிருக்கிறார். அங்குள்ள நிலைமைகளையும், இங்குள்ள நிலைமைகளையும் விளக்கும் […]

Read more

மனிதனைத் தேடும் மாமனிதர் போப் பிரான்சிஸ்

மனிதனைத் தேடும் மாமனிதர் போப் பிரான்சிஸ், மதுரை இளங்கவின் , வாழ்க்கை சட்டம் பப்ளிகேஷன் மீடியா, பக். 80, விலை 120ரூ. இன்றைய காலச் சூழலில் மனிதனுக்கு அனைத்து நிலைகளிலும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்பம் எத்தனை சிறந்து விளங்கினாலும், மனிதனுக்கு மனிதன் அன்பு செலுத்துவதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. இது தான் வாழ்க்கை நெறி என்று உணர்ந்த மகான்கள் பலர் உலகில் தோன்றினர். இறைவன் வகுத்த பாதையில் மக்களைப் பயணிக்கச் செய்யும் பணியையே திருத்தந்தையர் மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய பண்பாட்டுப் பாதையில் இன்று, […]

Read more

புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்

புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்,  சமயவேல்,  மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.136; விலை ரூ.100. 1972 இல் பள்ளி இறுதியாண்டை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வதற்காக தனது சொந்த ஊரான எட்டயபுரம் அருகில் உள்ள வெம்பூரை விட்டுக் கிளம்பிய நூலாசிரியர், அதற்குப் பிறகு அங்கே தொடர்ந்து வாழவில்லை. சொந்த ஊரைப் பிரிந்து 50 ஆண்டுகளானாலும் அதன் நினைவுகளில் அவர் எப்போதும் மூழ்கிக் கிடந்திருப்பது நூலைப் படிக்கும்போது தெரிய வருகிறது. மழை பெய்தால் நிறையும் கண்மாய். கண்மாய் நீரை நம்பி விவசாயம். மழையில்லாவிட்டால் […]

Read more

லயன் காமிக்ஸ்

லயன் காமிக்ஸ், எஸ். விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கடந்த, 70 – 80ம் ஆண்டுகளில் அதிக அளவில் இருந்தது. பல நிறுவனங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளியான காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதில் முன்னணியில் இருந்தது, முத்து காமிக்ஸ். பேன்டம் மற்றும் இரும்பு கை மாயாவி போன்ற கற்பனை கதாபாத்திரங்களில் வீரதீர சாகச கதைகள், வாசகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வரிசையில், சிவகாசியைச் சேர்ந்த, லயன் காமிக்ஸ் நிறுவனத்தார், ஆங்கிலத்தில் பிரபலமாக இருந்த […]

Read more

காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்

காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ், மு.ஞா.செ. இன்பா, கைத்தடி பதிப்பகம், பக். 194, விலை ரூ.125. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கவித்துவ நடையில் விவரிக்கும் நூல். சாவித்திரி தன் வாழ்வை, கலைக்கும், காதலுக்கும் அர்ப்பணித்து வாழ்ந்திருப்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. சாவித்திரி மீது ஜெமினி கொண்ட காதல் உயர்ந்ததா, ஜெமினி மீது சாவித்திரி கொண்ட காதல் உயர்ந்ததா… என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு இருவரின் காதல் உணர்வுகளும் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளன. சிறு வயதில் நடனம் கற்று, நாடகங்களில் நடித்து வந்த சாவித்திரி தேவதாஸ் படத்தில் […]

Read more

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அ.பழனிசாமி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 152, விலை 100ரூ. குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, வருணனை கொண்ட சிற்றிலக்கியமாகும். ஏனைய பிள்ளைத் தமிழ் நுால்களை விட, இது பலராலும் போற்றப்படும் சிறப்பிற்குரியது. இதற்கு, இந்நுாலாசிரியர் பழனிசாமி மிக எளிமையாகவும், தெளிவாகவும் பொருள் விளங்கக்கூடிய வகையில் உரை எழுதியுள்ளார். மேலோட்டமாகப் பொருள் கூறாமல், தாம் தமிழ்ச் சுவையில் கரைந்து உரை வரைந்துள்ளார். ‘பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்பசுங் கொண்டலே’ என்ற அடிகளுக்கு, எளிய […]

Read more

சாதனைச் செம்மல் ச.வே.சு

சாதனைச் செம்மல் ச.வே.சு, கமலவேலன்; மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.75; திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் வீரகேரள புதூரில் பிறந்தவர் ச.வே.சுப்பிரமணியன்.தமிழ் வளர்ச்சிக்குப் பலதுறைகளில், பலமுனைகளில், பல வழிகளில் தொண்டு செய்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்கு நராய் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். ஆராய்ச்சிக்கு ச.வே.சு. என்று திறனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டவர். ஆய்வடங்கலை முதன்முதலில் தோற்றுவித்தமை, இலக்கணத் தொகைகளை முதன்முதலில் உருவாக்கியமை, இலக்கியக் கொள்கைத் தொகுதிகளைப் படைத்தது, தமிழரின் மரபுச் செல்வம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றி ஆங்கிலத்தில் பல தொகுதிகளைக் கொண்டு […]

Read more
1 3 4 5 6