நூற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்

நூற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், தமிழில் வண்ணப்பாடல்கள் படைத்து மகிழச் செய்த புலவருள் தலையாயவர் அருணகிரிநாதர். 15 ஆம் நுாற்றாண்டில், தமிழகமெங்கும் முருகன் புகழ்பாடி பெருமை பெற்றார். அவர் பாடியவை திருப்புகழ் எனப் போற்றப்பட்டு வருகின்றன. 16 ஆம் நுாற்றாண்டில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இராம காதையை வண்ணப்பாடல்களில் இயற்றியுள்ளார். திருமால் எழுந்தருளியுள்ள, 108 திவ்விய தேசங்களைப் பற்றிய பிரபந்தங்கள் தமிழில் நிரம்ப உள்ளன. 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாள் பெருமைகளும், தலச்சிறப்புகளும், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலியவர்களல் பாடப்பட்ட […]

Read more