தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள்

தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள், ச.சுபாஷ் சந்திரபோஸ். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., பக். 214. விலை ரூ.175.

தொல்காப்பிய எழுத்தியல் தொடர்பான பல கேள்விகளுக்கு இந்நூல் விளக்கமளிக்கிறது. எழுத்தியலில் உள்ள பல சொற்களுக்குத் தீர்வு கூறுகிறது. தமிழ் எழுத்துகளின் வைப்பு முறை, உயிர்மெய், தன்னொற்று மிகுதல், இனவொற்று மிகுதல், எழுத்துகளின் இழப்பு, புணர்ச்சியும் உறழ்ச்சியும், புணர்ச்சி விதி இல்லாப் புணர்ச்சிகள், எழுத்துப் பேறும் சாரியையும், அண்ணவினம் ஆதல் ஆகிய ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.

உலகிலுள்ள, எழுத்துள்ள மொழிகள் அனைத்திலுமே ஒன்றிற்கு ஒன்று வரி வடிவம் வேறுபட்டிருக்கும். ஆனால் ஒலிப்பு முறை எல்லா மொழிகளிலும் ஒன்றாகவே இருக்கும்.

தொகுத்துக் கூறும் போதும் உயிர்களின் பிறப்புக் கூறும் போதும், புணர்ச்சியை விளக்கும்போதும் தொல்காப்பியர் ஏறக்குறைய ஒரே வகையான அமைப்பு முறையையே கையாண்டுள்ளார். வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, உயிர், மெய் எழுத்துகள் பிறக்கும் முறை, பிறக்கும் அடிப்படையிலேயே வைப்பு முறை உள்ளது என்பது உயிர் எழுத்துகளின் வைப்பு முறையில் கூறப்பட்டுள்ளது.

தென் திராவிட மொழிமுதலில் சகர மெய் இழந்த பல சொற்களைத் தொகுத்து டி.பர்ரோ என்பவர் கூறியுள்ளார். அந்தச் சொற்கள் எல்லாம் மிகவும் தொன்மைக் காலத்திலேயே மொழி முதலில் சகரத்தை இழந்துவிட்டன என்றும்; தமிழில் காணப்படும் இவை அனைத்தும் மொழி முதலில் இருந்த, சகர மெய்யை இழந்து பழந்தமிழிலேயே காணப்படுகின்றன என்பதையும் "சகர மெய்' பகுதியில் விளக்கியுள்ளார்.

மரபிலக்கணத்தில் இடம்பெற்று அதிகம் விளக்கப்படாத கோட்பாடுகளுள் ஒன்று "அண்ணவினம் ஆதல்' என்னும் ஒலித்திரிபுக் கோட்பாடாகும். அண்ணவினம் ஆதலுக்கு, பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம் மற்றும் நன்னூல் உரையாசிரியரர் சங்கர நமச்சிவாயர் தேவாரப் பாடல் ஒன்றை இந்த ஒலி மாற்றத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளதும், அண்ணவினம் ஆதல் பற்றி மொழியியல் அறிஞர் ஹெச்.ஏ.கீளிசனின் பதிவும் குறிப்பிடத்தக்கவை.”,

நன்றி: தினமணி, 1/7/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029393.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *