நல்கிராமம்
நல்கிராமம், கமலக்கண்ணன் கோகிலன், மணிமேகலைப்பிரசுரம், விலை 250ரூ.
இந்த நாவல், நல்கிராமம் என்று தலைப்பிடப்பட்டு இருந்தாலும் தற்போதைய நகரங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பற்றி அதிகமாக பேசும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
பொழுதுபோக்காக வெறும் கதையை மட்டும் சொல்லிப்போகாமல், தற்கால நாகரிக உலகில் பாதிக்கப்பட்ட சமூக நலன்கள், மதுவிலக்கு போன்றவை பற்றிய ஆதங்கமான கருத்துகள் கதை நெடுகிலும் வற்புறுத்தப்பட்டு இருக்கிறது. படிக்காத அந்தக் காலத்து பாட்டன் அப்பாவை விட, படித்த தற்காலத்து மக்கள் தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற சூடான உண்மை அழுத்தமான சொல்லப்பட்டு இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சி, நீட் தேர்வு அநீதி, தவறான கல்வி முறை, விவசாய நிலம் தொடர்பாக அரசியல்வாதிகளின் சுயநலம் போன்ற சமூக நலன் சார்ந்த பல விஷயங்களும் இந்த நாவலில் கையாளப்பட்டு இருப்பதால், இந்த நாவல் படிப்பதற்கு சுவாரசியமாகவும் பயன் உள்ளதாகவும் இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 15/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818