அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள்

அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள், சிவப்பிரியா, தென்னவர் திருநெறிப் பதிப்பகம், புதுதில்லி, பக். 752, வி 380ரூ. நாட்டின் வட கோடி எல்லையில் உள்ள கயிலை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அமரநாதம் தொடங்கி தென் கோடியில் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதர் கோயில் வரை 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று வழிபட்டு அக்கோயில்களின் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சமயக் குரவர்கள் பாடியுள்ளதை (உ.ம்: ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும், தாயே ஆகி வளர்த்தனை போற்றி […]

Read more

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 180, விலை 160ரூ. லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிய சர்ச்சையைத் தவிர்த்தும், தமிழர் நாகரிகம் ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர் உள்ளிட்டோருடன் எப்படியெல்லாம் தொடர்புடையதாக உள்ளது என்பதை, பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் வழிபாடுகள் உள்ளிட்ட சான்றுகளுடன் நூலாசிரியர் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார். திராவிடர்கள் வெளியிலிரந்து வந்தவர்களா? தமிழகத்தின் பூர்வீகக் குடிகளா? என்ற வாதத்தை மையமாக்கி, அறிஞர்களின் அனுமானங்களை வைத்து திராவிடர் தமிழக பூர்வகுடிகளே எனக் கூறும் நூலாசிரியர், அதை […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், பாவை சந்திரன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், பக். 838, விலை 600ரூ. காமாட்சி எனும் ஒரு பெண்ணைச் சுற்றி நிகழும் துன்பமும் இன்பமும் கசப்பும் களிப்புமான வாழ்க்கைதான் இந்நாவல். இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு, நாகப்பட்டினத்தின் ஊரகப் பகுதிக்குச் செல்வதில் தொடங்கி, மகனின் திருமணம் வரையிலான முடிவற்ற சிக்குகளில் சிக்கியும் சிதையாமல் தன்னை நிறுத்திக்கொள்ளும் ஓர் ஆளுமையின் கதை. உதவுபவளாக ஆலோசனை சொல்பவளாக, கண்டிப்பவளாக, எதிர் நிற்பவரின் மனவோட்டங்களைப் புரிந்து பதிலடி கொடுப்பவளாக, சொல்லாமல் வீட்டைவிட்டே வெளியேறிய கணவன் காணாமல் போகும்போது திடம் […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-5.html பெண்ணுரிமை, சமூகம், அரசியல், கலை, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் வாள்களைச் சுழற்றிக் கொண்டு வரும் கட்டுரைகளின் தொகுப்பு. பெண்ணை மனித உயிராக மதிக்காமல், அவள் ஆண்களுக்காகப் படைக்கப்பட்டவள் என்ற ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து, கறுப்பு நிறம் என்றால் தாழ்ந்தது என்ற மனப்பான்மையை எதிர்த்து, உழைக்கும் பெண்களின் அவலநிலையைக் குறித்து, பெண் படைப்பாளர்கள் அவமானப்படுவதை எதிர்த்து […]

Read more

மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/meinigari.html மெய்க்கு நிகரான, ஆனால் மெய் அல்லாத சூழலைக் குறிப்பது மெய்நிகர். ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்துபேரின் வாழ்வனுபவங்களைச் சுற்றியே இப்புதினம் பின்னப்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சி நிறுவனமே மெய்நிகரி. முதல் அத்தியாத்திலேயே இது மற்றொரு தமிழ்ப் புதினம் அல்ல என்பது உறுதியாகிறது. ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியில் சேரும் மூன்று இளைஞர்களும், இரு இளம் பெண்களும் […]

Read more

ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரித்தி ஷெனாய், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 304, விலை 200ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-294-0.html தனது ரகசிய ஆசைகளைத் தனக்குள் பட்டியலிட்டுக்கொள்ளும் தீக் ஷா, அவற்றை தனது வாழ்க்கையில் அனுபவித்துத் தீர்த்துக்கொள்ளும் நிலையில் அவள் வாழ்வே திசை மாறிப்போய்விடுகிறது. ஆனால் அதை வலியாக இல்லாமல், தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கும் புள்ளியாக மாற்றிக்கொண்டுவிடுகிறாள் அவள். 19 வயதில் திருமணமாகி, ஒரு மகனைப் பெற்று, பொறுப்புள்ள தாயாக, மனைவியாக, நல்ல மருமகளாக வாழும் அவளுக்கு […]

Read more

பிணங்களின் கதை

பிணங்களின் கதை, கவிப்பித்தன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 160, விலை 120ரூ. நாம் வாழும் சமூகத்தின் பாரம்பரியத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் விழுமியங்கள் நவீனம் என்ற பெயரில் இப்போது மெதுவாகச் சிதைக்கப்படுவது நம்மில் எத்தனை பேர்? ஆனால், தொண்டை மண்டலத்தில் பிறந்த நூலாசிரியர், தனது இந்தச் சிறுகதை நூலின் மூலம் தாம் பிறந்த மண் பாரம்பரியத்தை இழந்து வருவது குறித்து கனத்த இதயத்துடன் ஆதங்கப்பட்டுள்ளார். புதுமை என்ற பெயரில் எப்படி எல்லாம் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம்? இதனால், […]

Read more

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு, உரை விளக்கம் அருட்கவி அரங்க.சீனிவாசன், திருக்குறள் பதிப்பகம், பக். 536, விலை 500ரூ. உரையுடன் மீண்டும் வெளியானது அண்ணாமலை ரெட்டியார் பாடல்கள் தமிழ் வளர்த்த மதிப்பிற்குரிய தென்பாண்டித் தமிழகத்தில், பலவர்கள் பலர் தோன்றினர். அவர்களில் ஒருவர், கவியாற்றல் மிக்க இளைஞர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார். 30 ஆணடுகளே வாழ்ந்த அவர், பல்வேறு தெய்வங்களையும், ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பத் தேவரையும் பாடியுள்ளார். இசையுலகமும், நாடக உலகமும் பொதுமக்களும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடிய, உயர்வுமிகு காவடிச் சிந்துப் […]

Read more

பன்முகப் பார்வை

பன்முகப் பார்வை, எஸ். பொன்னுசாமி என்ற எஸ்.பொ., மித்ரா பதிப்பகம். முற்போக்கிற்கு மாற்று நற்போக்கு இலங்கை எழுத்துலகில் முக்கிய இடத்தில் இக்கும் எஸ்.பொன்னுசாமி என்ற எஸ். பொ., வின் பன்முகப் பார்வை என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில், ஆறுமுக நாவலருக்கு அடுத்து, வசன நடையில், தரமான படைப்புகளை அளித்தவர் எஸ்.பொ. தலித் குடும்பத்தில் பிறந்ததால், கல்விக் கூடங்களில் மாணவர்களால் தரக்குறைவாக நடத்தப்பட்டார். இதுபோன்றதொரு நிலை, தன் வாரிசுகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, வளோள இனப் பெண்ணை திருமணம் செய்து […]

Read more

காப்கா எழுதாத கடிதம்

காப்கா எழுதாத கடிதம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், பக். 208, விலை 200ரூ. இன்று வாழ்வதே முதன்மையானது தமிழ் எழுத்துலகின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில், ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன், இலக்கிய இதழ்களிலும், இணையதளத்திலும் எழுதிய கட்டுரைகளில், 28 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அனைத்து கட்டுரைகளும் புத்தகங்கள் தொடர்பானவை. வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழன் காத்தூ, ஹெர்மென் மெல்வில், தோரரோ, மிரோஜெக், ரேமண்ட் கார்வர் உள்ளிட்டோரின் புத்தகங்கள் பற்றியும், அது தொடர்பான ஆசிரியரின் பார்வையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. காப்கா, தன் […]

Read more
1 2 3 4 9