ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம், டிஸ்கவரி புக் பாலஸ், சென்னை, விலை 200ரூ. தமிழ் சினிமாவை, உலகத்தரத்துக்கு உயர்த்தியவர்களில் முக்கியமானவர் ஏவி.எம். மெய்யப்ப செட்டியார். ஏவி.எம். பேனரில் முதல் படம் நாம் இருவர். காரைக்குடியில் சாதாரண நாடகக் கொட்டகையில் தயாரிக்கப்பட்டு, சாதனை படைத்தது. படம் சிறப்பாக அமைவதற்காக செலவைப்பற்றி கவலைப்படமாட்டார். பாட்டு, நடனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அந்தநாள் படத்தில் முதலில் கதாநாயகனாக நடித்தவர் கல்கத்தா விஸ்வநாதன். படம் பாதிக்குமேல் எடுக்கப்பட்டபிறகு அதைப் பார்த்த ஏவி.எம்.முக்கு திருப்தி இல்லை. இதுவரை எடுத்ததை தூக்கிப் போட்டுவிட்டு, சிவாஜிகணேசனை கதாநாயகனாக […]

Read more

ஜென் தொடக்க நிலையினருக்கு

ஜென் தொடக்க நிலையினருக்கு, தமிழில் சேஷையா ரவி, அடையாளம் வெளியீடு. எளிமையாய் ஓர் அறிதல் ஜென் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதைப் பயில்வது எப்படி? அதன் தத்துவம் எப்படிப்பட்டது போன்ற விவரங்களை ஆரம்ப கட்ட நிலையினருக்கு சொல்லும் நூல் இது. இதன் சிறப்பியல்பு மிகவும் எளிமையான மொழியில் அழகான படங்களுடன் இது எழுதப்பட்டுள்ளது என்பதுதான். ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரஜோசிபோவிச் என்ற இரு அமெரிக்கர்களும் ஜென் பௌத்தம் பயின்றவர்கள். இவர்கள் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்காக எழுதிய இந்நூலை சேஷையா ரவி தமிழில் மொழி […]

Read more

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. விறுவிறுப்பான தகவல்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி. என்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் இந்நூலாசிரியர் தகவல்களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றப் பார்வையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் என்னும் […]

Read more

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்

தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல், தீ. கார்த்தி, இயல்வாகை, பக். 128, விலை 100ரூ. உணவை மருந்தாக சாபபிட்ட தமிழர்கள், இன்று மருந்தை உணவாக சாப்பிடுவதற்கு வாழ்க்கை முறையே காரணம். இன்றைய அவசர உலகில், பொருளை சேர்ப்பதற்காக, நிம்மதியை விற்று வருகிறோம். இந்த வாழ்க்கை முறையில் இருந்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதலே இந்த நூல். உணவு முறை, தூக்க முறை, குளியல் முறை, பாட்டிய வைத்தியம், உடற்பயிற்சி, உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு தீர்வு, வாழக்கை முறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் […]

Read more

ஜாதியற்றவளின் குரல்

ஜாதியற்றவளின் குரல், ஜெயராணி, கருப்பு பிரதிகள், தலித் முரசு, பக். 357, விலை 250ரூ. பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெளி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் […]

Read more

குற்றம் தண்டனை மரண தண்டனை

குற்றம் தண்டனை மரண தண்டனை, அ. மார்க்ஸ், கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. எதிர்ப்பு மரண தண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்படும் கருத்தியலாளர் அ.மார்க்ஸின் குற்றம், தண்டனை, மரண தண்டனை என்ற நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கிறது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன. நமது தூக்குமுறை வலி நிறைந்ததாகவும் இழிவுமிக்கதாகவுமே உள்ளது என்கிறார் அ.மார்க்ஸ். […]

Read more

கொல்வதெழுதுதல் 90

கொல்வதெழுதுதல் 90, ஆர்.எம். நௌஸாத், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 150ரூ. கிராமத்தின் கதை இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 என்ற நாவல் கிழக்கிலங்கையின் ஒரு முஸ்லிம் கிராமத்தளத்தில் இயங்குகிறது. அக்காலகட்ட மக்கள் மனநிலை மற்றும் அரசியல் சூழ்நிலை தெளிவாகக் காண்பிக்கிறது. 1990ஆம் ஆண்டு இலங்கை மக்கள் இலங்கை இராணுவம், அதிரடிப்படை, இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள், உதிரி இயக்கங்கள், ஊர்க்காவல்படை என்று பல வேறு அம்சங்களால் போரியல் அவதிக்குள்ளானார்கள். இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவுமே கற்பனையேயல்ல என்றாலும் யாவுமே நிஜமுமே […]

Read more

நீரோட்டம் அரசியல் பண்பாடும் பண்பாட்டு அரசியலும்

நீரோட்டம் அரசியல் பண்பாடும் பண்பாட்டு அரசியலும், தொகுப்பு ச. ராஜநாயகம், மக்கள் ஆய்வகம், சென்னை, விலை 190ரூ. பாபா படத்தின் தோல்விக்குக் காரணம் என்ன? சென்னை லயோலா கல்லூரியில் இயங்கிவந்த மக்ள் ஆய்வகம் என்ற அமைப்பின் சார்பில் தேர்தல்களை ஒட்டிக் கருத்துக்கணிப்புகள் எடுப்பது வழக்கம். 2001 சட்டமன்றத் தேர்தல் முதல் 2011 நாடாளுமன்றத் தேர்தல் வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களையொட்டி மக்கள் ஆய்வகம் நிகழ்த்திய கருத்துக்கணிப்புகளின் தொகுப்பாக நீரோட்டம் என்ற தலைப்பில் இந்நூல் வெளியாகி உள்ளது. பேராசிரியர் ச.ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள்மேற்கொண்ட கள ஆய்வுகள் […]

Read more

அசோகனின் வைத்தியசாலை

அசோகனின் வைத்தியசாலை, நடேசன், மகிழ் வெளியீடு, பக். 402, விலை 300ரூ. புதிய உலகின் வாழ்க்கைப் புலம் புத்தம்புதிய கதைக்களத்தில் பயணிக்கும் இந்நாவல் மூலம் புலம்பெயர் எழுத்தாளர்களில் நடேசன் கவனமீர்க்கிறார். கலிங்கத்தை வெற்றி கொண்ட அசோக சக்கரவர்த்தியே உலகில் முதலாவது மிருக வைத்தியத்தை தொடக்கி வைத்தவர் என்கிறது வரலாறு. ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நம்மூரில் வளர்ப்பதைப்போல ஏதோ எப்படியோ என்று யாரும் வளர்ப்பதில்லை. அவற்றின் மீது பொழிகின்றன அன்பும் எடுக்கின்ற கரிசனையும் நாம் நம் சகமனிதர்களுக்குக் கொடுப்பதையும்விடப் பல படிகள் மேலானது. அங்கே […]

Read more

யானை சவாரி

யானை சவாரி, பாவண்ணன், புக்ஸ் பார் சில்ரன், பக். 64, விலை 40ரூ. தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நூலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இவற்றில் போதையும் இல்லை; போதனைகளும் இல்லை. குழந்தைகளைப்போல், குழந்தையாகவே இருக்கின்றன. எளிய மொழியும், எளிய காட்சிகளும் அடங்கி உள்ளன. பாடல்களில் இருந்து குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் பெற்றோர், […]

Read more
1 2 3 4 5 6 9