உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள்

உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள், திருமலை அம்மாள், உஷா பிரசுரம், பக். 160, விலை 120ரூ. இன்றைய நிலையில் பெண்கள், படித்து வேலைக்கு சென்று, தங்கள் சொந்த காலிலேயே நிற்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டாலும், அவர்கள் சார்ந்த பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை. அவை, காலத்துக்கேற்றபடி வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கின்றன. அவற்றில் மாமியார் – மருமகள் பிரச்னையும் ஒன்று. இந்த பிரச்னையை உலகளாவிய பிரச்னையாகவே இந்நூலாசிரியர் பார்க்கிறார். மாமியார்களை ஐந்து வகையினராக பிரிக்கிறார். அவர்களை சமாளிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவிக்கிறார். புதுதாக திருமணமான பெண்களுக்கு மட்டுமின்றி, மாமியாரை […]

Read more

எருது

எருது, கார்த்திகை பாண்டியன், எதிர் வெளியீடு. மொழிபெயர்ப்பு நாவல்கள் பயனுள்ளவையா? கார்த்திகை பாண்டியன் எழுதிய எருது நாவலை சமீபத்தில் வெளியிட்டோம். இந்த நாவல், மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக அறியப்பட்டு, தமிழுக்கு அறிமுகம் ஆகாமல் உள்ள நாவல்களின் தொகுப்பு. தென் அமெரிக்கா, ஐரேபாப்பா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிரபல எழுத்தாளர்கள் ஆங்கிலம் மற்றும் அவரவர் மொழிகளில் எழுதியவை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. சீன எழுத்தாளர் மோயான் எழுதிய எருது என்ற நாவலின் பெயரையே, இந்த நாவலுக்கும் சூட்டியுள்ளார் ஆசிரியர். எருது நோபல் பரிசு பெற்ற […]

Read more

யாருடைய எலிகள் நாம்

  யாருடைய எலிகள் நாம்?, சமஸ், துளி, பக். 384, விலை 300ரூ. வார்த்தைகளால் ஆன சவுக்கடி To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-371-9.html பத்திரிகையாளர் சமஸ், கடந்த பத்தாண்டுகளில் வெவ்வேறு தமிழ் வெகுஜன ஊடகங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சூழலியல், வாழ்வியல், ஊடகம் என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட 84 கட்டுரைகள் இதில் அடங்கி உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை ஒருசேர படிக்கும்போது, விமர்சனத்துக்குள்ளான வரலாற்றை படிப்பது போன்ற மனநிலை ஏற்படுகிறது. எங்களுக்கு என்ன தண்டனை […]

Read more

தத்து அறிந்ததும் அறியாததும்

தத்து அறிந்ததும் அறியாததும், முனைவர் ஷ்யாமா, இலக்கியப்பீடம் வெளியீடு, பக். 144, விலை 100ரூ. குழந்தையை தத்து எடுப்பது எப்படி? தத்து பற்றி, தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூல் இது. வரவேற்கத்தக்க முயற்சி. ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கு பின்னால், எத்தனை சட்ட விதிமுறைகள் உள்ளன. எந்தெந்த சமூக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும், குழந்தையை தத்து எடுக்க தேவையான மன மாறுதல்கள் என, ஆழமாக அலசிஉள்ளார் ஆசிரியர். இந்தியாவில் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கை அதிமாக உள்ளது. மறுபக்கம் ஆதரவற்ற குழந்தைகளின் […]

Read more

தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்

தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள், பாஷா சிங், தமிழில் விஜயசாய், விடியல் பதிப்பகம், பக். 400, விலை 300ரூ. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் அனுப்பும், இந்த நவீன அறிவியல் உலகிலும், மனிதனின் கழிவை மனிதன் அள்ளும் சமூக கொடுமை இன்னும் ஒழிந்தபாடில்லை. இங்குள்ள அரசியல் கட்சிகளும் அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுக்க உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து, இந்த நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்நிலை, எதிர்கொள்ளும் பிச்னைகள், அவர்கள் […]

Read more

சாகசக்காரி பற்றியவை

சாகசக்காரி பற்றியவை, தான்யா, வடலி வெளியீடு, சென்னை, விலை 50ரூ. புலம் பெயர்ந்து கனடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வாழும் கவிஞர் தான்யாவின் கவிதைநூல். புலம் பெயர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளே கதைகளின் மையக்கரு. பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றி தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுற்றவைக்கிறது என்பதை பதிவு செய்ததோடு அச்சூழலில்லிருந்து வெளிவர போராடிக் கொண்டிருக்கும் சாகசக்காரிகளைப் பற்றிய கவிதைகள் இவை. குடும்பம், குடும்ப உறவுகளுடனான போரே இதன் பாடுபொருளாகியிருக்கிறது. பேராற்றல் மிக்க பெண்களை […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 84, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-217-0.html அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலமே, அறிவியல் மீது பெரிய ஈடுபாடு ஏற்படும். அதற்கு பல்வேறு அறிவியல் அறிஞர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இந்த நூலில், குழந்தைகளுக்காக, அறிவியல் அதறிஞர்களின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அறிவியல் துறையின் பல்வேறு பிரிவுகளில், முன்னோடிகளாக இருந்த ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, மேகனநாத் சாகா, ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்ற மேதைகளின் வாழ்க்கை […]

Read more

புதிய எக்ஸைல்

புதிய எக்ஸைல், சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், பக். 867, விலை 1000ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புனைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் புனைகதையில் தமிழர்களின் தொன்மையான ஞானமரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், தேரையர், தொல்காப்பியரில் இருந்து துவங்கி, முள்ளி வாய்க்கால் வரை, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புல், மரம், […]

Read more

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள், பாரதி மணி, வம்சி புக்ஸ், பக். 600, விலை 550ரூ. தமிழ் சினிமாவில், முதல்வராக பலமுறை நடித்த பாரதி மணியைப் பற்றிய புத்தகம் இது.ஆனால் நிஜத்தில் முதல்வர்களை காட்டிலும், அதிக பலம் படைத்த அதிகார மையமாக இவர் இருந்ததை, இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. தொழிலதிபர் பிர்லாவின் செயலர். நாடக சபையின் நிர்வாகி என இவரின் பல்வேறு முகங்களை, புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர் குறித்து சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்ற பல்வேறு […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ. பெண்கள் குறித்தும், தமிழர்களது வாழ்வுரிமை, தேசியம், வரலாறு, மாட்சிமை, பெருமை குறித்தும், முந்தைய, இன்றைய வாழ்வியல் நிலை குறித்தான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற பிரிவுகளின் கீழ், 32 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றள்ளன. பெண் படைப்பாளிகளின் பங்கு குறித்து முழுவதுமாய் ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியரும், ம.பொ.சி.யின் பேத்தியுமான தி. பரமேசுவரி. கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளரின் சுய கருத்தின் அடிப்படையிலும், […]

Read more
1 3 4 5 6 7 9