தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்
தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள், பாஷா சிங், தமிழில் விஜயசாய், விடியல் பதிப்பகம், பக். 400, விலை 300ரூ.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் அனுப்பும், இந்த நவீன அறிவியல் உலகிலும், மனிதனின் கழிவை மனிதன் அள்ளும் சமூக கொடுமை இன்னும் ஒழிந்தபாடில்லை. இங்குள்ள அரசியல் கட்சிகளும் அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுக்க உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து, இந்த நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்நிலை, எதிர்கொள்ளும் பிச்னைகள், அவர்கள் மீது அவிழ்த்து விடப்படும் வன்முறை என, அனைத்து தகவல்களும் இதில், அடங்கி உள்ளன. நன்றி: தினமலர், 19/1/2015.
—-
சாதி அரசியல் அதிகாரம், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 113, விலை 100ரூ.
இந்த நூல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில், தமிழகத்தின் அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடைய ஜாதிகளான தேவர், வேளாள கவுண்டர், வன்னியர், நாடார் ஆகிய ஜாதிகள் குறித்தும், இரண்டாவது பகுதியில் வேட்டுவர், ஆசாரி, போயர், வண்ணார், நாவிதர், குலாலர், மீனவர் ஆகிய எளிய ஜாதிகளின் தொன்மை, பழக்க வழக்கங்கள் போன்றவையும், அந்த மக்களின் தொன்மை, கோவில் விழா கலை மூலம், உயர் ஜாதியினர், தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறு நிலை நாட்டுகின்றனர் என்பத குறித்தும் விரிவாக அலசும் நூல். மானிடவியல்ஆய்வுகளில் ஆர்வமுள்ளோர் மட்டுமின்றி, வரலாற்றை அறிய விரும்புவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமலர், 09/1/2015.