சங்க கால ஜாதி அரசியல்

சங்க கால ஜாதி அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 96, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வெளியான, 13 கட்டுரைகளின் தொகுப்பு. மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல், தீபாவளியின் அரசியல், நோபல் விருதின் யுத்த அரசியல், சங்ககால ஜாதி அரசியல், மதிப்பெண் அரசியல், துவரம் பருப்பின் அரசியல் என ஒவ்வொரு கட்டுரையிலும், ‘அரசியல் மொழி’ என்று ஒன்றை பின்புலமாகக் கொண்டு இன்றைய சூழலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் முன்னாள், ‘உன்னதம்’ இதழாசிரியர். ‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று/ இந்நான் கல்லது குடியும் […]

Read more

முருகன் விநாயகன்

முருகன் விநாயகன், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. மீண்டும் தலைதூக்கும் கலாசாரவாதம்! தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் தளத்தில், முருகன் எனும் பிம்பம் மெல்ல கலைந்து, விநாயகர் எனும் பிம்பம் மேலெழுந்து வருவதை, பல்வேறு சான்றாதாரங்கள் மூலம், இந்த நூலில், கவுதம சித்தார்த்தன் சுட்டிக்காட்டி ஆய்வு செய்கிறார். விநாயக பிம்பத்தின் மூலத்தைச் சரியாகக் கணக்கிட்டுவிட முடியாது. எனினும், பிள்ளையார் வழிபாடாக தமிழ்ச் சமூகத்தில் பரவிய அவ்வணக்கத்தின் காலத்தை, இலக்கியங்கள் வழியே ஒரளவு சரியாகவே கணிக்க முடியும். அக்கணிப்பைச் செவ்வனே […]

Read more

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. குறிஞ்சி நில தெய்வமான முருகன் என்ற பிம்பம், பாரம்பரியமான தமிழ் மரபின் அடையாளம். இந்த பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, அந்த இடத்தில் விநாயகன் என்ற பிம்பத்தை முன் வைத்துக் கொண்டிருக்கும் சூழலை மிகவும் விரிவான ஆய்வுகளோடு எதிர்கொண்டு, பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார் நூலாசிரியர். இது வெறும் இந்துத்துவ வாசகக் கண்ணோட்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் இயங்கும் சர்வதேச அரசியல் என்ன என, கேள்வி எழுப்புகிறார். […]

Read more

தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்

தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள், பாஷா சிங், தமிழில் விஜயசாய், விடியல் பதிப்பகம், பக். 400, விலை 300ரூ. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் அனுப்பும், இந்த நவீன அறிவியல் உலகிலும், மனிதனின் கழிவை மனிதன் அள்ளும் சமூக கொடுமை இன்னும் ஒழிந்தபாடில்லை. இங்குள்ள அரசியல் கட்சிகளும் அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுக்க உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து, இந்த நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்நிலை, எதிர்கொள்ளும் பிச்னைகள், அவர்கள் […]

Read more