முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்
முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ.
குறிஞ்சி நில தெய்வமான முருகன் என்ற பிம்பம், பாரம்பரியமான தமிழ் மரபின் அடையாளம். இந்த பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, அந்த இடத்தில் விநாயகன் என்ற பிம்பத்தை முன் வைத்துக் கொண்டிருக்கும் சூழலை மிகவும் விரிவான ஆய்வுகளோடு எதிர்கொண்டு, பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார் நூலாசிரியர்.
இது வெறும் இந்துத்துவ வாசகக் கண்ணோட்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் இயங்கும் சர்வதேச அரசியல் என்ன என, கேள்வி எழுப்புகிறார். கலாசாரக் காலனியவாதம் என்ற தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமில்லாத, நுட்பமான, புத்தம் புதிய நுண்ணரசியலை முன்வைத்து, அதற்குள் இயங்கும் சர்வதேச செயல்பாடுகளை அக்கு அக்காகப் பிரித்து வைக்கிறார்.
நன்றி: தினமலர், 9/6/2016.