ஜென் தொடக்க நிலையினருக்கு
ஜென் தொடக்க நிலையினருக்கு, தமிழில் சேஷையா ரவி, அடையாளம் வெளியீடு.
எளிமையாய் ஓர் அறிதல் ஜென் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதைப் பயில்வது எப்படி? அதன் தத்துவம் எப்படிப்பட்டது போன்ற விவரங்களை ஆரம்ப கட்ட நிலையினருக்கு சொல்லும் நூல் இது. இதன் சிறப்பியல்பு மிகவும் எளிமையான மொழியில் அழகான படங்களுடன் இது எழுதப்பட்டுள்ளது என்பதுதான். ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரஜோசிபோவிச் என்ற இரு அமெரிக்கர்களும் ஜென் பௌத்தம் பயின்றவர்கள். இவர்கள் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்காக எழுதிய இந்நூலை சேஷையா ரவி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். போதிதர்மர் சீனத்துக்குச் சென்று போதித்த பௌத்த தியான முறையே ஜென். ஜென் என்பது படித்து புரிந்துகொள்ள இயலாத ஒன்று. இதை ஆழ்ந்த பயிற்சியின் மூலமே உணர முடியும். நம் அகப்பார்வையை விழிக்க வைத்தல், அன்றாட வாழ்வு முழுவதும் மாற்றம் பெறுதல், திறன்களைக் குவித்தல் போன்றவற்றை வலியுறுத்தும் ஜென் பௌத்த மதத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை வளர்த்தெடுக்கக்கூடியது. இந்நூலில் கடைசிப் பக்கம் வழி என்ன? என்று கேட்டு நட என்று பதில் சொல்கிறது. இதுதான் ஜென். நன்றி: அந்திமழை, 1/11/2014.
—-
சர்க்கரை மருந்தின்றி கட்டுப்படுத்த, தமிழ்ச்செல்வன், மருத்துவப்பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான யோசனைகளைக் கூறும் நூல். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.