மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் பகுதி 1

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் பகுதி 1, தமிழில் குறிஞ்சிவேலன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், பக். 656, விலை 410ரூ. கார்ட்டூனிஸ்ட், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைக் கதாசிரியர், ஓவியர் என பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன். அவருடைய ஐந்து நாவல்கள் இரு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. முதல் தொகுப்பில் மூன்று நாவல்களும், இரண்டாவது தொகுப்பில் இரு நாவல்களும் இடம்பெற்றுள்ளன. பங்களா கட்ட பூர்வீக வீட்டையும், நிலத்தையும் விற்கச் செல்லும் ஐஏஎஸ் அதிகாரி, அவற்றை விற்காமல் திரும்பும் கதை “சல்லி வேர்கள்‘’. சுதந்திரப் போராட்ட […]

Read more

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்)

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்), ஸ்வாமி, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 1230, விலை 900ரூ. உலக இலக்கியங்களிலே ஒப்புயர்வற்றது வியாசர் அருளிய மஹாபாரதம். இதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை என்னும் அளவுக்கு ஆன்மிகம், வாழ்வியல், அரசியல், உளவியல், வரலாறு, புவியியல் என அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டது. இப்போது வெளிவந்துள்ள இந்நூல், காலவோட்டத்துக்குத் தகுந்தபடி, நவீன காலத்துக்கு ஏற்ப நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. நூலாசிரியரின் சில விளக்கங்கள் ரசனையை மெருகேற்றுகின்றன. ‘ஜய’ என்ற சொல் மஹாபாரதத்தைக் குறிக்கும் சங்கேதச் சொல் […]

Read more

நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)

நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), ராம்குமார், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 360, விலை 225ரூ. தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாகசாமி, தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், கிருபானந்தவாரியார், தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் நேர்காணல்களைக் கொண்ட புத்தகம் இது. தண்ணீர் இல்லாமல் குழம்பு வைப்பதற்கான செய்முறையைக் கிருபானந்தவாரியார் சொல்லித் தருகிறார்.‘பச்சைக் குழந்தை அலங்காரத்தை விரும்புவதில்லை. தாய் அக்குழந்தையின் மீதுள்ள அன்பினால் அலங்காரம் பண்ணிப் பார்க்கிறாள். அதுபோலத்தான் கடவுளுக்க நாம் பால் போன்றவற்றைக் கொட்டி அபிஷேகங்களைச் செய்கிறோம்’ […]

Read more

கண்ணதாசன் முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)

கண்ணதாசன் முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), கல்பனாதாசன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 200, விலை 125ரூ. கலைஞர்கள், அறிஞர்கள் எனப் பல பிரபல மனிதர்களின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு, புத்தக உருவம் பெற்றுள்ளது. இதில், மேண்டலின் ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன், கா.சிவத்தம்பி, கேப்டன் லட்சுமி முதலிய சிர் நம்மிடையே இல்லை. அதுவே இந்நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. கண்ணதாசனின் பேட்டியில் தொடங்கி, 22 பிரபலங்களின் விரிவான நேர்காணல்கள் இந்த நூலில் உள்ளன. நேர்காணல்களின் நோக்கம், ஒரு காலகட்டம், அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், பாவை சந்திரன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், பக். 838, விலை 600ரூ. காமாட்சி எனும் ஒரு பெண்ணைச் சுற்றி நிகழும் துன்பமும் இன்பமும் கசப்பும் களிப்புமான வாழ்க்கைதான் இந்நாவல். இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு, நாகப்பட்டினத்தின் ஊரகப் பகுதிக்குச் செல்வதில் தொடங்கி, மகனின் திருமணம் வரையிலான முடிவற்ற சிக்குகளில் சிக்கியும் சிதையாமல் தன்னை நிறுத்திக்கொள்ளும் ஓர் ஆளுமையின் கதை. உதவுபவளாக ஆலோசனை சொல்பவளாக, கண்டிப்பவளாக, எதிர் நிற்பவரின் மனவோட்டங்களைப் புரிந்து பதிலடி கொடுப்பவளாக, சொல்லாமல் வீட்டைவிட்டே வெளியேறிய கணவன் காணாமல் போகும்போது திடம் […]

Read more