ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரித்தி ஷெனாய், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 304, விலை 200ரூ.

To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-294-0.html தனது ரகசிய ஆசைகளைத் தனக்குள் பட்டியலிட்டுக்கொள்ளும் தீக் ஷா, அவற்றை தனது வாழ்க்கையில் அனுபவித்துத் தீர்த்துக்கொள்ளும் நிலையில் அவள் வாழ்வே திசை மாறிப்போய்விடுகிறது. ஆனால் அதை வலியாக இல்லாமல், தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கும் புள்ளியாக மாற்றிக்கொண்டுவிடுகிறாள் அவள். 19 வயதில் திருமணமாகி, ஒரு மகனைப் பெற்று, பொறுப்புள்ள தாயாக, மனைவியாக, நல்ல மருமகளாக வாழும் அவளுக்கு அந்த குடும்ப வாழ்க்கையின் மீது ஒரு கட்டத்தில் அலுப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு மேல் என்ன? என யோசிக்கும் அவள், கணவனுக்கு தெரியாமல் சல்சா நடனம் கற்றுக் கொள்கிறாள். தோழியுடன் மது அருந்துகிறாள். நடன மாஸ்டருடன் டேட்டிங் செல்கிறாள். 15 ஆண்டுகளுக்குப் பின் அவளுடைய பழைய காதலன் ஆங்க் கிட்டைச் சந்திக்கிறாள். அந்த சந்திப்பு அவளைப் புதியவளாக, தனது இளமையை மீண்டும் கண்டெடுத்தவளாக, அவள் எப்படி இருக்க விரும்பினாளோ அப்படி அவளை உணர வைக்கிறது. தன்னை முழுவதுமாக அவனிடம் ஒப்படைத்துவிடுகிறாள். கணவனோ தனது வேலையில் மூழ்கிப் போய்விடுகிறான். தீக் ஷா கணவனை விட்டுப் பிரிந்து ஆங்கிட்டுடன் தனியாக வசிக்கத் தொடங்குகிறாள். இன்றைய மேல்தட்டு வர்க்க வாழ்க்கையில், குடும்ப உறவுகளில் பழைய மதிப்பீடுகள் எப்படி உதிர்ந்துகொண்டிருக்கின்றன என்பதைச் சித்திரிக்கிறது இந்நாவல். தீக்ஷாவின் மீறல், துரோகம், தான் விரும்பிய வாழ்க்கையை நோக்கி அவளுடைய பயணம் எல்லாம் அவளுக்கு விடுதலையை அளித்ததா அல்லது சீரழித்ததா? என்ற கேள்வி, இன்றைய வாழ்க்கையை மதிப்பிட சிறந்த திறவுகோலாக இருக்கும் என்று தோன்றுகிறது. சிறந்த கதை சொல்லல் இந்நாவலின் தனிச்சிறப்பு. நன்றி: தினமணி, 29/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *