கரிசல்காட்டு ஜமீன்தார்கள்
கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு. காவ்யா. விலை: ரூ.270.
கரிசல்காடு பரந்த பூமி என்றாலும், அதில் உள்ள இளையரசனேந்தல், குருவிகுளம் ஆகிய இரண்டு ஜமீன்கள் பற்றிய முழுமையான தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. கட்டபொம்மனை தூக்கிலி டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரித்தாளும் சூழ்ச்சியாக இளையரசனேந்தல் ஜமீனை ஆங்கிகலேயர்கள் இரண்டாகப் பிரித்தார்கள் என்றும், இப்போதும் அங்கே வெளிநாட்டு குளிர்பானங்கள் காணப்படுவது இல்லை என்றும் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
குருவிகுளம் ஜமீனின் அரண்மனை இப்போது தீப்பெட்டி கம்பெனியாக உள்ளது என்பதும் இதில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு ஜமீன்கள் பற்றிய வியப்பான செய்திகளுடன் அரிய புகைப்ப டங்களும் இணைக்கப்பட்டு இருப்பதால், அந்த ஜமீன்களின் கடந்தகால வரலாற்றை ரசித்துப் படிக்க முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 17/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033153_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818