இந்தியாவில் கடல் கோட்டைகள்

இந்தியாவில் கடல் கோட்டைகள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், பக்.272, விலை ரூ.275. பாதுகாப்பற்ற கடல்களுக்கு நடுவே பாதுகாப்பான கோட்டைகளை அமைப்பது என்பது சாதாரண விஷயமா? ஆனால், அப்படிப்பட்ட கோட்டைகளையும் அமைத்துள்ளனர் என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. உலகில் எங்கெல்லாம் கடல் சார்ந்த நாடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் தமது நாட்டைப் பாதுகாக்க இந்த வகை கடல் கோட்டைகள் அமைக்கப்படுகின்றன. இவை ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கடல் கோட்டைகள், கடல் நடுவில் துறைமுக வசதி கொண்ட மணல் தீவுகள் அல்லது பெரிய பாறைத் […]

Read more

சதுரகிரி சித்தர்கள்

சதுரகிரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை: ரூ.300. சித்தர்களின் பூமி எனப்படும் சதுரகிரிக்குச் செல்லும் பயண அனுபவமாக இந்த நூல் விரிவடைகிறது. சதுரகிரி பயணத்தின்போது கண்ட காட்சிகள், அந்த இடம் தொடர்பான தகவல்கள் ஆகியவை பக்திப்பெருக்குடன் விளக்கப்பட்டு இருக்கின்றன. அவை தொடர்பான மரபுவழிக் கதைகள், அமா னுஷ்யமான செய்திகள் ஆகியவையும் தரப்பட்டு இருக்கின்றன. அங்கு செல்வதற்கான ஆபத்தான பாதைகள் குறித்தும், பாதுகாப்பாக எவ்வாறு செல்வது என்பது பற்றியும் தகவல் தரப்பட்டு இருக்கிறது. பெண் சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்த அதிசய தகவல், பாண்டவர்கள் […]

Read more

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2, சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.350. சங்கப் பாடல் வரிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மிக விரிவாக கோட்டை ஆய்வுகள் மேற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. மன்னர்களுக்குள் ஏற்பட்ட பகைமை, பொறாமை, பணியாமை, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவற்றால் நடந்த போர்களுக்கெல்லாம் கோட்டைகளே தாக்குதல்களையும், தண்டனைகளையும் ஏற்று காலப்போக்கில் சிதிலமடைந்த விபரங்கள், வரலாற்றுச் சம்பவங்களின் குறிப்புகளோடு தரப்பட்டுள்ளன. அன்றைய நாடுகளின் அமைப்பு, வானளாவிய கோட்டைகளின் அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பக் கலைகள், […]

Read more

தமிழகச் சுற்றுலாக் கோட்டைகளும் காதல் கோட்டைகளும் பகுதி – 3

தமிழகச் சுற்றுலாக் கோட்டைகளும் காதல் கோட்டைகளும் பகுதி – 3, சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.150 பண்டைய தமிழர் ஆட்சிக் காலத்தில் கட்டடக் கலையும் அழகுணர்ச்சியும் சிறந்து விளங்கியிருக்கின்றன என்பதை சங்க கால இலக்கியங்கள் இயம்புகின்றன. குறிப்பாகக் கோட்டைகளும், மதில்களும் முடி மன்னர்களின் பெருமைகளாகக் கருதப்பட்டன. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும்போது, எதிரி மன்னரின் மதிலை அழிப்பதே அன்று வெற்றியின் உச்சமாகக் கருதப்பட்டது. பிற்காலத்தில் வணிகத்திற்கான கோட்டைகளும், காதல் கோட்டைகளும் கூட கட்டப்பட்டன. செஞ்சி கோட்டை, வேலுார் கோட்டை, தரங்கம்பாடி கோட்டை, சதுரங்கப்பட்டினம் […]

Read more