சதுரகிரி சித்தர்கள்
சதுரகிரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை: ரூ.300.
சித்தர்களின் பூமி எனப்படும் சதுரகிரிக்குச் செல்லும் பயண அனுபவமாக இந்த நூல் விரிவடைகிறது. சதுரகிரி பயணத்தின்போது கண்ட காட்சிகள், அந்த இடம் தொடர்பான தகவல்கள் ஆகியவை பக்திப்பெருக்குடன் விளக்கப்பட்டு இருக்கின்றன. அவை தொடர்பான மரபுவழிக் கதைகள், அமா னுஷ்யமான செய்திகள் ஆகியவையும் தரப்பட்டு இருக்கின்றன. அங்கு செல்வதற்கான ஆபத்தான பாதைகள் குறித்தும், பாதுகாப்பாக எவ்வாறு செல்வது என்பது பற்றியும் தகவல் தரப்பட்டு இருக்கிறது.
பெண் சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்த அதிசய தகவல், பாண்டவர்கள் இங்கு ஒரு நெல்லிக்கனியைப் பறித்ததால் சிக்கலில் மாட்டிக் கொண்டது பற்றிய செய்தி போன்ற வையும் இடம் பெற்றுள்ள இந்த நூல் சதுரகிரிப் பயணத்திற்கு வழிகாட்டியாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 17/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818