முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்
முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள், தொகுப்பாசிரியர்: கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், வெளியீடு: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விலை:ரூ.100.
தமிழக சட்டசபையில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாகப் பணியாற்றியவர்கள் சட்டமன்ற விவாதத்தில் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ள நிலையில், 3-வது பாகமாக இந்த நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதில் வாணியம்பாடி எச்.அப்துல் பாசித், அரவக்குறிச்சி கலீலுர் ரஹ்மான், கடையநல்லூர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் உரைகள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தனது தொகுதி பிரச்சினைகளுடன், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக, ஹஜ் பயண மானியம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்பட பல விஷயங்கள் பற்றி பேசியது வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 17/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818