பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம்
பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம், ஜெகவீர பாண்டியனார், தோழமை வெளியீடு, விலை 500ரூ.
பாஞ்சாலங்குறிச்சி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஆவர். அவர்கள் இருவரும் சிற்றரசர்களாக இருந்தபோதிலும் பேரரசரும் போற்றும்வகையில் வீரம் செறிந்தவர்கள். இந்த நூலில் முதல் பாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றையும், இரண்டாம்பாகத்தில் ஊமைத்துரையின் வரலாற்றையும் ஜெகவீர பாண்டியனார் விரிவான முறையில் எழுதியுள்ளார். இதன் மூலம் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் வீரம் செறிந்த வாழ்க்கை மற்றும் அவர்களது தேசப்பற்று, தெய்வப்பற்றை அறிந்து கொள்ள முடிகிறது. உயிர் துறக்க நேரிட்டாலும் உறுதி குன்றாத உயர் குணம் கொண்ட இந்த இருவர்களின் சரித்திரம், இளைஞர்களின் இதயங்களில் வீரத்தை விளைவிக்கும்.
நன்றி: தினத்தந்தி, 13/4/2016.
—-
ஆவிசேட்டை, ஊத்துமலை இராமகிருஷ்ணன், தென்றல் நிலையம், விலை 50ரூ.
கொலை செய்யப்படும் காதல் ஜோடி, ஆவியாக வந்து பழிக்குப்பழி வாங்க முயற்சி செய்வது பற்றிய கதை. விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஊத்துமலை இராமகிருஷ்ணன். விலை 50ரூ. இதே நூலாசிரியர் எழுதி, இதே பதிப்பகம் வெளியிட்டுள்ள மற்றும் 3 நூல்கள். 3 கில்லாடிகளும் 6 அடியாளும் விலை 75ரூ. எத்தனும் ஏமாளியும் விலை 50ரூ. உறவுகள் விலை 60ரூ.
நன்றி: தினத்தந்தி, 13/4/2016.