லால்பகதூர் சாஸ்திரி

லால்பகதூர் சாஸ்திரி, அனில் சாஸ்திரி – பவான் சாஸ்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், புத்தக உலகம், விலை 245ரூ.

சமுதாயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறு. அவரது குழந்தைப் பருவ நிகழ்வுகளையும், தனி மனித வாழ்வு, பொது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் இந்த நூலில் அனில் சாஸ்திரி – பவான் சாஸ்திரி ஆகியோர் சுவைபட தொகுத்து வழங்கியுள்ளனர்.

இந்த நூலைத் தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன் மொழிபெயர்த்துள்ளார். கடுமையான உழைப்பு, அறிவுத் திறத்தால் சாஸ்திரி உயர்ந்த பதவியைப் பெற்றார்.

அவரது நேரம் தவறாமை, நெறிபிறழா நடைமுறை, விருந்தோம்பல், ஏழைகள் மீது இரக்கம் போன்ற குணங்களால் மக்கள் மனதில் இடம் பெற்றார் என்பன போன்ற செய்திகள் இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு படிப்பினை.

நன்றி: தினத்தந்தி, 13/4/2016.

Leave a Reply

Your email address will not be published.