ஆக்கப்படுவதே வாழ்க்கை
ஆக்கப்படுவதே வாழ்க்கை, பிரீத்தி ஷெனாய், தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக்.214, விலை ரூ.235 ஒரு சுயமுன்னேற்ற நூலைப் போன்ற தலைப்பைக் கொண்ட இந்நூல், உண்மையில் சுயமுன்னேற்ற நூல் அல்ல, நாவல். கொச்சினில் உள்ள அங்கிதா என்ற கல்லூரி மாணவி தில்லி ஐஐடியில் படிக்கும் வைபவ் என்பவனிடம் காதல் வயப்படுகிறாள். செல்பேசி இல்லாத அக்காலத்தில் அவனுடன் தொலைபேசியில் பேசுவதே சாதனையாக இருக்கிறது. அங்கிதா பயின்ற கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் அவள் போட்டியிட்டு வெல்கிறாள். பிற கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. […]
Read more