முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. பல்வேறு வார இதழ்கள், மாத இதழ்களில் வெளியான ஆசிரியரின் 35 சிறுகதைகளின் தொகுப்பு. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வாழ்க்கைப் போராட்டங்களுமே கதைக்கான களமாக விரிகின்றன. மகிழ்ச்சி, சந்தேகம் பொறாமை, உறவுச் சிக்கல்கள் என எல்லாப் பின்னணிகளிலும் கதைகள் பயணிக்கின்றன. ஒரு குழந்தையின் மனதில் ஒருவர் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், இந்த நிலை மாறும்போது அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதையும் அற்புதமாக விளக்குகிறது ‘12 வயதுப் […]

Read more

முதல் வரிசை மூன்றவாது இருக்கை

முதல் வரிசை மூன்றவாது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, பக். 208, விலை 160ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பு. ‘சுருக்’ கமாக ஒரு விஷயத்தைச் சொல்லி அதனைப்பற்றி அசைபோட வைப்பதில் தேர்ந்தவர் படுதலம் சுகுமாரன். இத்தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் அந்த ரகத்தைச் சேர்ந்ததே. அப்படிப்போடு அருவாளில் வரும் புவனாவாகட்டும், முதல் வரிசை மூன்றாவது இருக்கையில் வரும் ஜானகியா கட்டும் அன்றாட வாழ்வின் எதார்த்த பெண்களின் பிரதிபலிப்புகள். பெரும்பாலும் பெண்மையை, அவர்களின் ஆழ் மனதை எடை போடும் கதைகளே அதிகம். […]

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. ஆழமான சிறுகதைகளை எழுதுவதில் வல்லவர் படுதலம் சுகுமாரன். இந்தத் தொகுதியில் அவருடைய 35 கதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாம் நெஞ்சைத் தொடும் கதைகள். அநாவசியமாக வளர்த்தாமல், நாலைந்து பக்கங்களில் கதையை அடக்கி விடுவது இவருடைய சிறப்புகளில் ஒன்று. முதல் கதையான “மாப்பிளை”, 5 பக்கங்களில் பிரமாதமாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more