முதல் வரிசை மூன்றாவது இருக்கை
முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ.
பல்வேறு வார இதழ்கள், மாத இதழ்களில் வெளியான ஆசிரியரின் 35 சிறுகதைகளின் தொகுப்பு. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வாழ்க்கைப் போராட்டங்களுமே கதைக்கான களமாக விரிகின்றன.
மகிழ்ச்சி, சந்தேகம் பொறாமை, உறவுச் சிக்கல்கள் என எல்லாப் பின்னணிகளிலும் கதைகள் பயணிக்கின்றன.
ஒரு குழந்தையின் மனதில் ஒருவர் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், இந்த நிலை மாறும்போது அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதையும் அற்புதமாக விளக்குகிறது ‘12 வயதுப் பெரியவர்’ சிறுகதை.
நன்றி: தி இந்து, 5/11/2016.