நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி
நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி, தமிழில் பூ. சோமசுந்தரம், அலைகள் பதிப்பகம், விலை 140ரூ.
ஜான் ரீடைப் போலவே ரஷ்யப் புரட்சியைப் பற்றி மிக விரிவாக எழுதிய மற்றொரு எழுத்தாளரும் அமெரிக்காவைச் சேர்ந்தவரே அவர் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம்ஸ், ஜான் ரீடின் வழிகாட்டலில் வந்தவர். இருவருமே ரஷ்யப் புரட்சியை நேரில் கண்டவர்கள். ரஷ்யா பற்றியும், அந்நாட்டில் புரட்சியை வழிநடத்திய லெனின் பற்றியும் நிலவிய பல்வேறு தவறான நம்பிக்கைகள், சித்திரங்களை மாற்றியதில் ரைஸ் வில்லியம்ஸின் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.
ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் 1922- லிருந்து 1959 வரை ரஷ்யாவுக்கு அடிக்கடி சென்று திரும்பியுள்ளார் ரைஸ் வில்லியம்ஸ். இந்த அனுபவங்கள், அங்கு அவர் மேற்கொண்ட சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு ரஷ்யா, அந்நாட்டு ஆட்சியைப் பற்றி பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில் முதன்மையானது ‘Through the Russian Revolution’. இதுவே ‘நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி’ என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது.
தமிழில் மொழிபெயர்த்தவர் பூ. சோமசுந்தரம். இந்த நூலின் புதிய பதிப்பை அலைகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை 140ரூ. இந்நூலில் உள்ள லெனினைப் பற்றிய பகுதியை மட்டும் ‘லெனின்’. ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து’ என பாரதி புத்தகாலயம் சுருக்கமான நூலாக வெளியிட்டிருக்கிறது.
நன்றி: தி இந்து, 5/11/2016.