நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி

நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி, தமிழில் பூ. சோமசுந்தரம், அலைகள் பதிப்பகம், விலை 140ரூ. ஜான் ரீடைப் போலவே ரஷ்யப் புரட்சியைப் பற்றி மிக விரிவாக எழுதிய மற்றொரு எழுத்தாளரும் அமெரிக்காவைச் சேர்ந்தவரே அவர் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம்ஸ், ஜான் ரீடின் வழிகாட்டலில் வந்தவர். இருவருமே ரஷ்யப் புரட்சியை நேரில் கண்டவர்கள். ரஷ்யா பற்றியும், அந்நாட்டில் புரட்சியை வழிநடத்திய லெனின் பற்றியும் நிலவிய பல்வேறு தவறான நம்பிக்கைகள், சித்திரங்களை மாற்றியதில் ரைஸ் வில்லியம்ஸின் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் 1922- […]

Read more

கெளதம புத்தர்

கெளதம புத்தர், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள் பதிப்பகம், பக்.144, விலைரூ.110. அகிம்சையின் அடையாளமாக அறியப்படும் கெளதம புத்தரின் பிறப்பு முதல் பரி நிர்வாணம் வரை அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கால வரிசைப்படி இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கெளதம புத்தரின் வரலாறாயினும் அவருக்கு முந்தைய தலைமுறையினரான சுத்தோதனர், சிம்மஹணு, ஜயசேனன் ஆகிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தை சித்தார்த்தனைப் பார்த்த அரண்மனை நிமித்திகர்கள், முதுமை, நோய், மரணம், துறவு இவற்றை அறிந்தால் இவன் துறவியாவான் என்று கூற, சித்தார்த்தனின் […]

Read more

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும்

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும், டி. ஞானையா, அலைகள் பதிப்பகம், 4/9, 4வது மெயின் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 405, விலை 250ரூ. நூலாசிரியர் ஞானய்யாவுக்கும், இந்த நூலுக்கும் அணிந்துரை வழங்கிய நீதியரசர்(ஓய்வு) வி. சதுர். கிருஷ்ணய்யருக்கும், வயது 90ஐ தாண்டிவிட்டது. உலக வரலாற்றில் மிகவும் சென்சிடிவான ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவனிர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை பற்றியும், அந்த சமூகத்தை முன்னேற்ற பாடுபட்ட தலைவர்களுள், சில முன்னோடிகள் குறித்தும் விரிவாகவும், விலாவாரியாகவும் இந்த நூலை எழுதியிருக்கிறார் டி. ஞானய்யா. […]

Read more