கெளதம புத்தர்

கெளதம புத்தர், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள் பதிப்பகம், பக்.144, விலைரூ.110.

அகிம்சையின் அடையாளமாக அறியப்படும் கெளதம புத்தரின் பிறப்பு முதல் பரி நிர்வாணம் வரை அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கால வரிசைப்படி இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

கெளதம புத்தரின் வரலாறாயினும் அவருக்கு முந்தைய தலைமுறையினரான சுத்தோதனர், சிம்மஹணு, ஜயசேனன் ஆகிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

குழந்தை சித்தார்த்தனைப் பார்த்த அரண்மனை நிமித்திகர்கள், முதுமை, நோய், மரணம், துறவு இவற்றை அறிந்தால் இவன் துறவியாவான் என்று கூற, சித்தார்த்தனின் தந்தை சுத்தோதனன் இவையெல்லாம் தன் மகனின் கண்ணில் பட்டுவிடக் கூடாது என தனி மாளிகையில் அவனை வளர்ப்பது, அப்படியிருந்தும் சித்தார்த்தன் முதியவனையும், நோயாளியையும், உயிரற்ற உடலையும், துறவியையும் பார்த்துவிடுதல், துறவு மேற்கொள்ளுதல்,சித்தார்த்தனின் தந்தை சுத்தோதனன் கலக்கம், சித்தார்த்தனின் மனைவி யசோதரையின் துயரம், சித்தார்த்தன் கபிலவஸ்து நகருக்கே வந்து யாகசம் எடுப்பது… இப்படி புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஒரு புதினத்திற்கான சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது இந்நூலில்.

சித்தார்த்தன் முதியவனைக் கண்டு யெüவன மதத்தையும், நோயாளியைக் கண்டு ஆரோக்கிய மதத்தையும், உயிரற்ற உடலைக் கண்டு ஜீவித மதத்தையும் இழப்பது, தன்னிடம் உபதேசம் பெறத்தக்க சீடனைத் தேடி காசிக்குப் பயணப்படுவது இப்படி பற்பல சுவையான தகவல்கள் இந்நூலில் உள்ளன.

அதுமட்டுமல்ல, கெüதமபுத்தர் வரலாறு குறித்து எந்த ஐயமும் ஏற்படாத வகையில் மன்னர்கள், மனைவியர்கள், அரச வாரிசுகள், நாடுகள், நகரங்கள், விழாக்கள், இவற்றின் பெயர்கள், காலகட்டம் உட்பட எல்லாவற்றையும் விரிவாக விளக்கியிருப்பது இந்நூலாசிரியர் போன்ற ஓர் ஆய்வாளருக்கே சாத்தியம்.

நன்றி: தினமணி, 30/7/2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *